
தமிழ்நாட்டின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹசன் மௌலானா, ஒரு நிலம் ஒருமுறை வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டால், அது நிரந்தரமாக வக்ஃப் சொத்தாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ. வக்ஃப் சொத்தின் நிரந்தரத்தன்மை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு தாலுகாவை சேர்ந்த 150 குடும்பத்தினர் வசிக்கும் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் இருக்கிறது காட்டுகொல்லை கிராமம். இங்கே வசிக்கும் 150 குடும்பத்தினருக்கு அவர்களின் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வசிக்கக்கூடிய இடங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்றும் இந்த 150 குடும்பத்தினரும் உடனடியாக அந்த இடத்தை காலி செய்து தர்காவிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அந்த இடத்திற்கு வாடகை செலுத்த வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதாம்.
இது தொடர்பாக இந்தியா டுடேவில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த நோட்டீஸை பெற்ற கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் படி மனு அளித்துள்ளனர். சையது அலி ஷா என்பவர் பெயரில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் தங்களுக்கு சொந்தமான நிலங்களை உள்ளூர் தர்காவிற்கு சொந்தமானது என்று கூறுவதாகவும் மக்கள் வேதனையோடு இருக்கிறார்கள்
அவர்கள் கூறுகையில் நான்கு தலைமுறைகளாக இங்கே தான் வசிக்கிறோம் எங்களுடைய விவசாய நிலம் இங்கே தான் இருக்கிறது, திடீரென இந்த நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என கூறுவது எப்படி நியாயமாகும் இது எங்களுக்கு பேரதிர்ச்சியை தருகிறது என அந்த கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலம் எங்களுக்கு தான் சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கியுள்ள ஆவணங்கள் இருக்கின்றன என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்றும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து களத்தில் இந்து முன்னணி தலைவர் மகேஷ் காட்டுகொல்லை கிராம மக்களை தலைமை ஏற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அழைத்து சென்று புகார் அளிக்க வைத்திருக்கிறார். அவர் அளித்துள்ள போட்டியில் இந்த மக்கள் நான்கு தலைமுறைகளாக இதே பகுதியில் தான் வசிக்கின்றனர், விவசாயம் செய்கின்றனர். நிலம் இவர்களுக்கு சொந்தமானது என்பதற்கு அரசு வழங்கிய ஆவணங்களே இருக்கின்றன. திடீரென 330/1 என்ற சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். உடனடியாக மாவட்டம் இதில் தலையிட்டு கிராம மக்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் இப்போது வாடகை செலுத்த வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் அறிவுறுத்தியுள்ளார். வக்ஃப் சட்டத்தால் உரிமை கோரப்பட்ட 2ஆவது கிராமம் இதுவாகும். முன்னதாக,திருச்செந்துறை கிராமத்திற்கும் இதேபோன்ற நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, அந்த நிலம் வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்கத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. அதில் இந்துக்கள் வசிக்கும் கிராமங்களை வக்பு சொத்து என கூறி இந்து மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். மத்திய அரசு இருக்கும்போதே இந்த வேளைகளில் ஈடுபட்டால்ம் மாநில சுயாட்சி பெற்றால் தமிழகத்தை விற்று தனி ராஜாங்கம் நடத்த திமுக தயாராகி வருகிறது என மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டர்கள்.