
தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை கிளம்பியிருக்கும் சம்பவம் வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தான் இதில் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் வெளியாகி சூட்டை கிளப்பியுள்ளது. குறிப்பாக வக்பு வாரியங்களிடம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளது. வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
வக்பு வாரியம் என்பது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளை வாரியம் ஆகும். மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக சொத்து நன்கொடையாக வழங்கப்படும். ஒரு சொத்து வக்ஃப் வாரியத்திற்கு கீழ் என்று உரிமை கோரப்பட்டால்.. அந்த சொத்தை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அந்த சொத்து அதன்பின் வக்ஃப் வாரியத்தின் கட்டுப்பாட்டிலேயே நிரந்தரமாக இருக்கும்
தமிழகத்தில் திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்பு வாரியத்துக்கு சொந்தம் என பிரச்சனை எழுந்தது 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயிலும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கிராம மக்கள் தலையில் இடியை இறக்கினார்கள். கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர் மேலும் இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு வக்ஃப் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
வேலூர் மாவட்டம் கட்டுக்கொள்ளை கிராமத்தில் உள்ள ஒரு தர்கா, முழு கிராமத்தின் நிலத்தையும் வக்ஃப் சொத்து என்று கூறி வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், வக்ஃப் வாரியத்தின் நில உரிமையை ஆதார ஆவணங்களுடன் உறுதிப்படுத்தினால், கிராம மக்கள் குறைந்தபட்ச வாடகை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்கள். இது அந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .இந்த நிலையில் தான் நாட்டின் அதிமுக்கிய சட்டதிருத்தங்களில் ஒன்றும், அவசியம் செய்தாக வேண்டிய விஷயமுமான வக்ப் வாரிய சட்டதிருத்த மசோதா. இரு அவைகளிலும் வெற்றிகரமாக சட்டமாக்கபட்டது.
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான பல்வேறு எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்தில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லி மேலிடம் சிறப்பு குழு அமைத்து தமிழகத்தை ரேடாருக்குள் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தான் கூறிய தமிழகத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஒலித்த குரல் பாகிஸ்தானிலும் ஒலிப்பது எஎப்படி இதை வைத்து ஏதவாது நாசவேலைகளில் பாகிஸ்தான் ஈடுபட உள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டம் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட அறிக்கையில், 'முஸ்லிம்களிடம் இருந்து மசூதிகள் உள்ளிட்ட சொத்துகளை பறிக்கவும் அவர்களை ஓரங்கட்டவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்து இருந்தது.இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இந்திய பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டம் தொடர்பாக பாகிஸ்தான் உள்நோக்கத்துடன் மற்றும் ஆதாரமற்ற வகையில் தெரிவித்த கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம்.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதில் பாகிஸ்தான் மற்றவர்களுக்கு போதிப்பதை விட, அதன் சொந்த வரலாற்றை பார்ப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்..வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஒலிக்கும் குரலே பாகிஸ்தானிலும் ஒலிக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.