24 special

ரீல்ஸ் பழக்கத்தால் ஆசிரியருக்கு ஏற்பட்ட விபரீதம்!

reels video
reels video

மாதா பிதா குரு தெய்வம்! இதில் அன்னை தந்தைக்கு பிறகு குரு என்றும் மதிக்கப்படும் ஆசிரியர்களே வருகின்றனர் அதற்குப் பிறகுதான் தெய்வமே வருகிறது. இதற்கு ஏற்றார் போல் நம் அறிவுக்கண்ணை திறந்து வைக்கும் ஆசிரியர்கள் நம் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்காற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 90களில் உள்ள ஆசிரியர்களின் நிலைமையும் தற்போது உள்ள ஆசிரியர்களின் நிலைமையில் சற்று வேறுபட்டுள்ளது அன்றைய காலத்தில் என் குழந்தை படித்தால் போதும் அதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் தனது குழந்தைகளை முழுவதுமாக ஒப்படைத்து விடுவார்கள் ஆனால் இன்றோ என் குழந்தை எது செய்தாலும் அடிக்காதீர்கள் என்று கூறும் பெற்றோர்கள் அதிகமாக உள்ளனர்.. அதோடு முந்தைய காலம் போன்று ஆசிரியர்களுக்கு தற்போது பாதுகாப்பும் குறைவாக இருக்கிறது ஆசிரியர் திட்டிவிட்டார் என்றால் சில மாணவர்கள் அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் செய்திகள் தற்போது அதிக அளவில் வெளியாவதும் குறிப்பிடத்தக்கது. இதே போன்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞன் ஆசிரியரை கொலை செய்துள்ளது தற்போது செய்திகளில் பரபரப்பாக வெளியாகி உள்ளது. 


கர்நாடக மாநிலம் மாண்டிய மாவட்டத்தை சேர்ந்த தீபிகா என்பவர் மேலகோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேலும் இந்த ஆசிரியர் ரீல்ஸ் மூலம் பிரபலமானவராகவும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று பள்ளி சென்ற தீபிகா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்ததாலும் அவரது செல்போனை மூலம் அவரை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினாலும் தீபிகாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த இருபதாம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீபிகாவின் தீவிரமாக தேடி வந்த பொழுது தீபிகாவின் வாகனம் மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ள மலை அடிவாரத்தில் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் விரைந்து அங்கு சென்ற பொழுது அப்பகுதி அருகே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதற்குப் பிறகு அந்த சடலம் காணாமல் போன ஆசிரியர் திபிக்காதான் என்பது தெரியவந்துள்ளது மேலும் அவர் கொடூரமாக கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து ஆசிரியர் தீபிகாவின் கொலை சம்பவத்திற்கு யார் காரணம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு ஆண்டுகளாக தீபிகாவுடன் பழகி வந்த நித்தேஷ் கவுடா என்ற இளைஞர் தீபிகாவின் கொலை காரணமானவர் என்பது தெரிய வந்தது. அதனை அடுத்து அவருடன் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியர் தீபிகா  நித்தேஷ் கவுடாவுடனும்  ரீல்ஸ் செய்துள்ளார் என்றும் அதனை அடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

ஆனால் நித்தேஷ் கவுடாவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அவருடன் தீபிகா பேசுவதை நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்கு வரும்படி நித்தேஷ் கவுடா தீபிகாவை மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அழைத்துள்ளார். தீபிகாவும் அங்கு சென்ற பொழுது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த நித்தேஷ் தீபிகாவை கழுத்தில் நெறித்து கொன்றதாகவும் அதற்குப் பிறகு மலை அடிவாரத்தில் உடலை எரித்து புதைத்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சமூகம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு ஆசிரியராக இருக்கும் ஒருவருக்கே இது போன்ற நிலைமையா என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.