உலகத்தை காப்பதற்காக இந்த உலகில் ஏசு குழந்தையாக பிறந்தார் என்றும் நமது பாவங்களை போக்குவதற்காகவே அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும் நம்பிக்கையை கொண்டுள்ள மதமே கிறிஸ்தவ மதம். இந்த மதம் சார்பாக பல அறக்கட்டளைகள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் விடுதிகள் காப்பகங்கள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் கிறிஸ்தவ மதத்தில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று கூட்டம் அமைத்து ஏசுபெருமானின் கதைகள் மற்றும் அற்புதங்களை எடுத்துக் கூறி கூட்டு ஜெபத்திலும் ஈடுபடுவார்கள். பெரும்பாலும் இந்த ஜெபமானது ஒட்டுமொத்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களை காக்க வேண்டும் என்ற பொருளை மையமாகக் கொண்டு அரங்கேறும் அதே சமயத்தை இந்த ஜெபக்கூட்டத்தின் பொழுது பலர் தங்களை மறந்து பழமொழிகளில் அதாவது வேறு பல புரியாத மொழிகளில் பேசுவார்கள் சிலர் ஓங்கி உற்சாகமாக கடவுளை நோக்கி பேசிக் கொண்டிருப்பார்கள் மேலும் கோவில்களில் எப்படி ஒருவர் சாமி வந்தால் ஆடுவாரோ அதேபோன்று ஒரு பரவச நிலையை அடைந்து ஆலயங்களில் நடைபெறும் ஜெபக்கூட்டத்திலும் சிலர் நடந்து கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வெளியிடப்பட்டு வருகிறது மேலும் குறிப்பாக அங்கு முன்வைக்கப்பட்டு பேசப்படும் கருத்துக்கள் அனைத்தும் சில நேரங்களில் சர்ச்சையிலும் முடிகிறது.
மேலும் ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் ஜெப கூட்டங்களை காமெடி வீடியோக்களாக மாற்றப்பட்டு பரிதாபங்கள் என்ற ஹெட்லைன் உடன் ஃபேஸ்புக் ட்விட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டு ஏராளமான லைக்ஸ்களும் குவியும். அதோடு காமெடி வீடியோக்களாக பல இணையவாசிகள் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இது போன்ற மற்றுமொரு வீடியோ தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில், ஒரு ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது அங்கு இருக்கும் அனைவரும் மண்டிபோட்டு ஜெபம் செய்து கொண்டிருக்கின்றனர் பொதுவாக இதுபோன்று ஜெபம் செய்வதில் நடுவராக ஒருவர் முன் நின்று அந்த ஜெபத்தை வழிநடத்திச் செல்வார் அதே போன்று இந்த வீடியோவிலும் ஒருவர் தலைமையேற்று அந்த ஜெபத்தை வழிநடத்திச் செல்லும் பொழுது நாட்டில் உள்ள அனைத்து எம்எல்ஏ மற்றும் எம்பிகளை விமர்சித்து ஜபம் செய்யப்படுகிறது, அதில் பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, முதல்வர் மு க ஸ்டாலினிற்கும் போன்றவர்களை முன்னிறுத்தி ஜெபங்கள் முன்வைக்கப்பட்டது.
அதோடு இதில் உத்தர பிரதேசம் யோகி ஆதித்யநாத் பெயரை குறிப்பிட்டும் ஜெபம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பலவற்றைக் குறித்து இந்த ஜெபக்கூட்டத்தில் பேசப்பட்டு ஜெபங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது ஆனால் இந்த ஜெபக்கூட்டத்தில் இவர்கள் ஏன் பிரதமரிலிருந்து, தமிழக முதல்வர் வரை அனைவரையும் குறிப்பிட்டு ஜெபம் செய்கிறாரே என்ற வகையில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த வீடியோ தமிழில் தெள்ளத்தெளிவாக இருப்பதாலும் தமிழகத்தில் ஏதோ ஒரு இடத்தில் தான் இது போன்ற ஜெபக்கூட்டம் ஒரு ஆலயத்தில் நடைபெற்றுள்ளது! எங்கு நடைபெற்றது என்ற தேடல்களும் தற்போது அதிகரித்துள்ளது.