24 special

திருவண்ணாமலையில் ரஜினி நிகழ்த்திய அதிசயம்

rajinikanth, pande
rajinikanth, pande

சிவபெருமான் ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரைக் கொண்டது திருவண்ணாமலை. அங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசித்து சொல்கின்றனர் அதிலும் குறிப்பாக பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வருவது பழங்காலம் தொட்டு நடைபெற்ற வருகிறது. இந்த கிரிவலம் கூட சிவபெருமானின் திருவிளையாடலால் தொடங்கப்பட்டதாக புராண வரலாறு கூறுகிறது. கைலாயத்தில் ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் இரண்டு கண்களையும் மூடுயதால் உலகம் இரண்டு உயிரினங்கள் அனைத்தும் பரிதவித்தது! மேலும் பார்வதி தேவிக்கும் தோஷம் ஏற்பட்டது அந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்காக பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் மேற்கொண்டு இருந்தார்.. பார்வதி தேவி மேற்கொண்ட தவத்தால் மனம் கொளுந்த சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து வேண்டிய வரம் கேள் என்றார் பார்வதி தேவி அதற்கு உங்களை என்றென்றும் தெரியாத வகையில் உங்கள் உடலில் பாதியை எனக்குத் தந்து அருள வேண்டும் என்று கூறினார்! நீ கேட்ட வரம் நடைபெற வேண்டும் என்றால் என்னை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் கூற அதை ஏற்றுக் கொண்டு பார்வதி தேவி ஈசனே மலையாக அமர்ந்திருக்கும் திருவண்ணாமலையை சுற்றி வந்தார் இதன் மூலம் சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாக மாறும் என பார்வதி தேவி திருவண்ணாமலையில் சுற்ற ஆரம்பித்தார்.


அதற்குப் பிறகு சிவபெருமான் பார்வதியின் வரத்தை கொடுத்தார் அப்பொழுது நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்தது போல திருவண்ணாமலை கிரிவலம் வரும் அனைவருக்கும் நீங்கள் ஆசிர்வாதங்களை வழங்க வேண்டும் என்று கேட்டு கொடுத்ததற்கு இணங்க சிவபெருமானும் சம்மதித்து அன்றிலிருந்து திருவண்ணாமலை கிரிவலம் பிரசித்தி பெற்றதாக மாறியது. திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால் நாலாவது பாவங்களும் போய்விடும் என்றும், கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவன் மீது அதிக பக்தி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மீது கொண்ட பக்தியால் கிரிவலம் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் நடித்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பாகவே திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து சென்றார். சிவன் மீது அதிக பக்தி கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் இமயமலைக்கு சென்று வருவதையும் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் இடம் சிவபெருமானே ஒரு தகவலை கொடுத்துள்ளார் என்ற ஒரு பரபரப்பான செய்தியை பாண்டே தெரிவித்துள்ளார். 

அதாவது பொது மேடையில் பேசும் பாண்டே திருவண்ணாமலையில் கிரிவலம் இரவில் வரும்பொழுது இருட்டாக இருக்கிறது அதனால் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக கிரிவல பாதை முழுவதிலும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் முடிவிற்கு வருகிறார், இதற்கு பகவான் யோகிராம் சரத்குமார் ரஜினிகாந்த்தை சென்று பாருங்கள் என்று கூறுகிறார் உடனடியாக கலெக்டரும் ரஜினிகாந்திடம் சென்று பார்க்கும் பொழுது இந்த மாதிரி கிரிவலம் செல்லும் பாதைகளில் தெருவிளக்கு வைக்க வேண்டும் என்று கலெக்டர் கூறியதுடன் சரி ஒரு தெருவிளக்கு வைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்ட சூப்பர் ஸ்டார் கேட்டுள்ளார் அதற்கும் பதில் அளித்த கலெக்டர் சரி நான் ஒரு தெருவிளத்திற்காகும் செலவை பார்த்துக் கொள்கிறேன் என்று சூப்பர் ஸ்டார் கூறியுள்ளார்.

இதற்கு அடுத்து மறுபேச்சு பேச முடியாமல் கலெக்டர் அங்கிருந்து திரும்ப திடீரென்று சூப்பர் ஸ்டாலிடமிருந்து கலெக்டர் அவர்களுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ரஜினிகாந்த் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பாதை முழுவதும் தெருவிளக்குகள் அமைப்பதற்கு நானே பொறுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இதற்கிடையில் கலெக்டர் ரஜினிகாந்த் முதலில் பார்த்தபோது யோகிராம் தான் இதை உங்களிடம் கூற சொன்னார் என்று கலெக்டர் கூறவில்லை ஆனால் இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தானாக முன்வந்து தெருவிளக்கு மொத்தத்தையும் அமைப்பதாக கூறுகிறார், இப்படி இருக்கும் பொழுது யார் ரஜினிகாந்த்திற்கு இந்த ஒரு தகவலை கொடுத்திருப்பார்கள் அங்குதான் சிவன்  திருவுரல்! இடையில் சொல்லப்படாத ஒரு வார்த்தையை கடவுளே ரஜினியிடம் கூறியிருக்கிறார் என்ற பாண்டே பேசியுள்ள வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.