24 special

வாயை விட்டு சிக்கிய பப்பு! நாடாளுமன்றமே திகைத்த அந்த பதில்! இப்போ தெரியுதா மோடி பவர்..

PMMODI,RAHULGANTHI
PMMODI,RAHULGANTHI

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இதற்கு பதிலடியாக பாஜக எதிர்கட்சிகளை பொளந்து கட்டி வருகிறது. “பாகிஸ்தானை ஆதரிப்பதில் ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் அதிக ஆர்வம் காட்டுவதால், விவாதத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். இந்தியாவின் எதிர் சக்திகளுக்கு உதவுவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க கருத்தை முன்வைத்துள்ளார்.


இதற்கிடையில் பிரதமர் ஆட்சி குறித்து உலக நாடுகள் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். பிரதமராக மோடி பதவியேற்ற பின் பொருளாதாரத்தை வளர்த்தார், மேக் இன் இந்தியாமூலம்  ஓசைபடாமல் இந்திய ராணுவத்தை மேம்படுத்தினார். முதல் முறையாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தயாரிப்புக்களையும் கொண்டுவந்து ராணுவத்தை பலபடுத்தினார் காஷ்மீரில் முழு அமைதி கொண்டுவந்தார் இன்னொரு பக்கம் ரபேல் விமானம் ரஷ்ய எஸ் 400 காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கபட்ட ஆகாஷ் முதல் எல்லாமும் புத்துயிர் பெற்றன, பிரம்மோஸ் ஏவுகனை பெருக்கபட்டது, கடல் கப்பல்கள் நீர்மூழ்கிகள் என எல்லாமும் புதிதாயின‌செயற்கை கோள் தகர்ப்பு ஏவுகனை முதல் ஹைப்பர் சோனிக் ரக ஏவுகனை வரை செய்து சாதித்தது தேசம் 60 ஆண்டுகால காங்கிரஸ் சீர்கேட்டை வெறும் 10 ஆண்டுகளில் மாற்றிகாட்டினார் மோடி

கல்வானில் சீனா மோதியது வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சீனாவினை அடித்துவிரட்டி 1 லட்சம் வீரர்களை லடாக்கில் நிறுத்தி மிரட்டியது அப்போதுதான் நடந்தது, மிரட்டியே பழக்கபட்ட சீனா அடிவாங்கிய பின்பே பேச்சுவார்த்தைக்கு வந்து பணிந்தது பஹல்காம் தாக்குதலுக்கு  22 நிமிடங்களில் இந்தியா பாகிஸ்தானை நொறுக்கிபோட்டது, பாகிஸ்தானின்  பாராளுமன்றம் வரை சென்று தாக்கியது இந்தியா.

அடுத்த நான்கு நாட்கள் பாகிஸ்தான் முயற்சித்ததெல்லாம் ஒரே ஒரு தாக்குதலை  ஒரே ஒரு குண்டை இத்தியாவின் மீது   வீசி விடமுடியாதா என்பது

அதனை இந்திய வான்பாதுகாப்பு சாதனங்கள் முறியடித்தன,  துருக்கி தயாரிப்பு ட்ரோன்கள் அடிவாங்கின, எப் 16 விமானமும் சீனாவின் ஜே 17 விமானமும் அடிவாங்கின, இன்னும் சீனாவின் பி.எல் ரக ஏவுகனைகள் இந்திய விமானத்தை தொடமுடியாமல் அடிவாங்கின‌

பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்த எச்9 வான்பாதுகாப்பு சாதனம் , பாகிஸ்தான் ராணுவ தளத்தில் இருந்த அமெரிக்க தடுப்பு சாதனமெல்லாம் அடிவாங்கின‌

பாகிஸ்தானின் அணுவளாகம் தாக்கபட்டதில் சில சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா ஓடிவந்தது ஆனால் அதற்கு முன்பே பாகிஸ்தான் மண்டியிட்டு கதறியதால் இந்தியாவின் தாக்குதல் நிறுத்தபட்டது இந்த நான்கு நாட்கள் போரில் இந்தியாவின் பிரம்மோஸ் ரகம், ஆகாஷ் ரகமெல்லாம் உலக மதிப்பை பெற்றன இந்திய இஸ்ரேல் கூட்டுதயாரிப்பான பாராக் உலக அளவில் புகழ்பெற்றது

மோடி அரசில்தான் இந்தியா ஆயுத ஏற்றுமதி நாடானது இன்று உலகின் முதல் 10 ஆயுத ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இந்தியா நிற்கின்றது

இந்தியாவின் வெற்றி கண்டு அமெரிக்க எப் 35 விமானம் தர அமெரிக்கா விரும்புகின்றது , இந்தியாவுடன் ஜாவலின் ரக ஏவுகனைகளை செய்ய அது ஆர்வம் கொள்கின்றது, அமெரிக்க அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வந்திருக்கின்றன‌

பின் தங்கிய, பலவீனமான உதவாக்கரை கொள்கைகளை வைத்திருந்த காங்கிரஸின் இந்தியாவினை சீர்படுத்தி உலக அரங்கில் நான்காம் பொருளாதார நாடாக, மிகபெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக எதிரிகள் பெயரை கேட்டாலே அலறும் நாடாக மாற்றியிருக்கின்றார் மோடி

ராமர்கோவிலை தொட்டால் ஒரு சொட்டு எண்ணெய் வராது என மிரட்டலை தாண்டி ரஷ்ய எண்ணெய் ஆதரவுடன் அராபியாவே இந்தியாவினை தேடிவரும் அளவு அவர் சாதித்திருக்கின்றார்

அமெரிக்கா, சீனா என பெரிய நாடுகளே இந்தியா பற்றி பேச ஆயிரம் முறையோசிக்கின்றன, அந்த அளவு பலமான நாடாக மாற்றி வைத்திருக்கின்றார்,மோடி.. இதையெல்லாம் மறந்து விட்டு நாடாளுமன்றத்தில் வாயை விட்டு வாங்கி கட்டி கொண்டுள்ளது எதிர்க்கட்சிகள்