Cinema

பர்ஹான படம் மூலம் பாடம் கற்றுக்கொன்ற ஐஸ்வர்யா ராஜேஷ் ..!

Iswarya rajesh
Iswarya rajesh

மே 12ம் தேதி திரைக்கு வந்தது பர்ஹானா படம். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர், பர்ஹானா படத்தில் எங்கள் சமூக உணர்வுகளை புண்படுத்திவிட்டார்கள், எங்கள் வீட்டு பெண்களை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று கூறி கருப்புக்கொடி ஏந்தினர் படத்தை வெளியிடக்கூடாது என்று திரையரங்குகள் முன்பாகவும் போராட்டம் நடத்தினர்.


இதற்குப் பிறகு பல முக்கிய பிரமுகர்கள் இந்த படத்தை பற்றிய ஆதரவு கருத்துக்களை வெளியிட்டனர். அதாவது எந்த ஒரு மதத்தை புண்படுத்தும் வகையில் பர்ஹானா படம் எடுக்கப்படவில்லை என்று கூறினார்கள்,  இருந்தாலுமே இந்த படத்திற்கான எதிர்ப்புகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது. இந்த சம்பவத்திற்கு முன்பாக முன்பாகவே கடவுள் என்றெல்லாம் ஒன்னும் கிடையாது மனிதம் தான் பெரியது நாங்கள் எல்லாம் மதத்தையும் தாண்டி வாழ்பவர்கள், எனக்கு ஹிந்தி தெரியாது போடா, என தொடர்ந்து இடதுசாரி சிந்தனையாளராக வலம் வந்துள்ளார்  ஐஸ்வர்யா ராஜேஷ்.. தன்னை திரையுலகில் செக்குலரிஸ்டாக கட்டிக்கொண்டு சில சமயங்களில் அதனை வெளிப்படுத்தியும் வந்தார். 

இந்த நிலையில் இவர் நடித்து வெளியான பர்ஹானா படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்ததால் சென்னை தியாகராய நகரில்  உள்ள ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நான்கு காவலர்கள் எப்பொழுதுமே அவரது வீட்டில் பாதுகாப்பிற்கு நிற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. பாதுகாப்பு போடப்பட்டாலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு பக்கம் பயத்தையும், குழப்பத்தையும் இந்த படம் ஏற்படுத்தி இருக்கிறதாகவே கூற வேண்டும் ஏனென்றால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் தயார் பெயர் இடம் பெற்றிருந்திருக்கிறது, ஆனால் அவரது தாயாரே சென்று அந்த விருதை வாங்கி உள்ளார் பர்ஹானா படத்தின் எதிர்ப்பு காரணமாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களால் ஆளுநர் மாளிகையில் நடக்கும் விருது வழங்கும் விழாவிற்கு கூட செல்ல முடியவில்லை. 

இப்படி நமக்கு தொடர் எதிர்ப்புகள் வருகிறதே என்ற எண்ணத்தில் புலம்பி தவிக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே ஐஸ்வர்யா ராஜேஷ்'ஸை முடங்கிப் போட்டது பர்ஹானா படம். தன்னை வீட்டுக்குள்ளே முடக்க வைத்துள்ள  படத்தின் மூலம் அவர் பாடம் கற்றுக் கொண்டார் என்று பல்வேறு தரப்பிடமிருந்து கூறப்படுகிறது ஏனென்றால், ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்து வெளியாக உள்ள தீரா காதல் படத்திற்காக திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளார். அதாவது வருகிற 26 ஆம் தேதி தீரா காதல் படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

இதனை ஒட்டி நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில், எல்லா கதைகளுக்கு பின்னால் ஒரு கதை கண்டிப்பாக இருக்கும் இயக்குனர் ரோகினுக்கும் எனக்கும் இந்த படத்தை எடுப்பதற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்த சமயத்தில் நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று இயக்குனரும் நானும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றோம் செல்லும் வழியில் தான் எனது நண்பர் தமிழ் குமரன் லைக்கா நிறுவனத்தில் இருந்து அழைத்து இப்படத்தை தயாரிப்பதாக கூறினார் என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

அதாவது தொடர்ந்து சித்தாந்தத்திற்கு எதிராகவும், அரசியலுக்கு நெருக்கமான கருத்துக்களை தெரிவித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பர்ஹானா படத்தில் ஏற்பட்ட அனுபவம் ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்துவிட்டது என்றே சொல்லப்படுகிறது.  இதன் மூலமே அவர் தீரா காதல் படத்திற்காக திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்துக்களை நாம் இனிமேல் பகைத்துக் கொள்ளக் கூடாது எதிர்க்கவே கூடாது என நினைத்து அதற்கான காரியங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் இறங்கி உள்ளார். இந்து சமயத்தை பற்றி வேண்டா வெறுப்பாக பேசி வந்து செக்யூலரிஸ்டாக, ஹிந்தி தெரியாது போடா என பேசி வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தற்போது ஒரு பெரிய படிப்பினை ஏற்பட்டுள்ளது.