24 special

தமிழ்கத்தில் அமிட்ஷா சொல்லி சென்ற விஷயம். ... இப்போ தெரிகிறதா அமிட்ஷா ஏன் அப்படி பேசினார் என்று? திகிலில் திமுக..

amitsha .mkstalin
amitsha .mkstalin

2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் , 2026 பாராளுமன்ற தேர்தல்களின் போது,  அதிமுகவில் உள்ளவர்கள் செய்த தவறினால் வெற்றியை திமுகவிடம் விட்டு கொடுத்தது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் செய்த தவறு, தினகரன் சசிகலாவை ஒதுக்கியத்தால் கிட்டத்தட்ட 40 தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் தோல்வி. 2026 சட்டசபை தேர்தலிலும் நடந்து விடக்கூடாது என்பதால், தான் ஓராண்டு முன்கூட்டியே  பாஜக அதிமுக கூட்டணி முடிவுசெய்துள்ளது. 


இதற்கிடைய அதிமுக பாஜக கூட்டணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வேகம் காட்டினார் என தெரிய வந்துள்ளது.கடந்த 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜ.க  20 தொகுதிகளில் போட்டியிட்டு, நான்கில் மட்டுமே வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த கூட்டணி என்பதால், இரட்டை இலக்க வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பா.ஜ.க மேலிடத்துக்கு, இது ஏமாற்றம் அளித்தது.அதற்கு அதிமுகவும் காரணம் என ரிப்போர்ட் சென்றது. அதிமுகவிடம் காரணம் கேட்டால் பாஜகவுடன் இருந்ததால் சிறுபான்மையினர் ஒட்டு கிடைக்கவில்லை என அதிமுக கூறியது. அதனை தொடர்ந்து பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அதிமுக இல்லாமல் நாம் போட்டியிடுவோம் என டெல்லி தலைமை அண்ணாமலைக்கு பச்சை கொடி காட்டியது.  மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெறவில்லை என்றால் அதிமுகவை நம்பி எத்தனை சிறுபான்மையினர் கட்சி அவர்களிடம் போகிறது என பாப்போம் மேலும் எவ்வளவு ஓட்டுக்கள் வாங்குகிறார்கள் என பார்க்கலாம் என அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. 

நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதியில் தமிழக பாஜக அசுர வளர்ச்சி பெற்றது. அதிமுகவை 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பின்னுக்கு தள்ளியது.  பெரிதும் எதிர்பார்த்த சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்கவில்லை இந்த நிலையில் தான் அதிமுக டெல்லியுடன் நெருக்கம் காட்ட தொடங்கியது. மேலும் அமித்ஷா அதிமுகவிடம் கூறுகையில் நம் ஓட்டுகள் பிரிந்து திமுக வென்று வந்தது மேலும் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியான, சிறுபான்மையினர் ஓட்டு வரும் என காத்திருக்காமல், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையின ஓட்டுகள் 20 சதவீதம் என எடுத்துக் கொண்டால், மீதம் இருக்கும் 80 சதவீத ஓட்டுகளில் 50 சதவீத ஓட்டுகளை பெற  திட்டமிட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து , அடுத்த ஆண்டு வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எடப்பாடியும்  தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி விரும்புகிறார். மேலும் அமித்ஷா குறைந்தபட்சம் பா.ஜ.,வுக்கு, 10 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள், அதாவது 23 பேர் கிடைக்க வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார்.மேலும் இது குறித்து பாஜக தலைவர்களிடம் , எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை காட்டிலும், எத்தனை தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்பதை கண்டறிந்து அறிக்கை தருமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு அவர் வேலை கொடுத்திருக்கிறார். 

மேலும் அதிமுகவும் இதை தான் விருப்புகிறதாம். கடந்த நாடாளுன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் பாஜக  25%  மேல் வாங்கிய 35 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜகவுக்கு விட்டு தரமுடிவு எடுத்துள்ளதாம். இதனை தொடர்ந்து தான் அதிமுக பாஜக, கூட்டணிக்கு ஒப்புக்கொண்டுள்ளது 'கூட்டணி கட்சிகள் பலவீனம் அடைந்திருப்பதால், வரும், 2026ல், தி.மு.க.,வை தோற்கடிப்பது கடினம் அல்ல' என்று, அ.தி.மு.க., - பா.ஜ., தலைவர்களுக்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கையூட்டி இருக்கிறார்.

'தி.மு.க., அணியில் காங்கிரஸ் தவிர, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு சதவீதம் கூட ஓட்டு வங்கி இல்லை. கடைசியாக, 2014 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ், 4.3 சதவீத ஓட்டுக்களை மட்டுமே பெற்றது. இப்போது, அது இன்னும் குறைந்திருக்கும். கம்யூனிஸ்ட், வி.சி., - ம.தி.மு.க., கட்சிகளுக்கு, தலா ஒரு சதவீதம் கூட ஓட்டு இருக்காது. எனவே, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 2021ல் செய்த தவறுகளை இப்போது செய்யாமல் இருந்தால், 2026ல் தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவது கடினமாக இருக்காது' என அவர் கூறியுள்ளார்.