
2026-ல் நடக்கவிருக்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு, இப்போதே களப்பணிகளைத் தொடங்கிவிட்டன தமிழக அரசியல் கட்சிகள். , ஆளும் தி.மு.க அரசும் தன் பயணத்தை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், ‘அடுத்த தேர்தலுக்குத் தயாராகிவிட்ட தி.மு.க அரசு, கடந்த தேர்தலில் அளித்த முக்கிய வாக்குறுதிகளையே இன்னும் நிறைவேற்றவில்லை..!’ என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதுபழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம், மாதம் ஒரு முறை மின்கட்டணம், சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் எனப் பல முக்கியக் கோரிக்கைகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அதைச் சுத்தமாக மறந்தேவிட்டார் முதல்வர்” என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். 2026 தேர்தல் களத்தில், இதை ஒரு பிரசாரமாகவும் முன்னெடுக்க அவை திட்டமிட்டிருக்கின்றன.
இந்த நிலையில் தான் அதிமுக பாஜக கூட்டநீ திமுக தலையில் இடியை இறக்கியுள்ளது. எப்போதும் போல் எதிர்கட்சிகள் ஒன்றுகூடவிடாமல் தடுப்பதற்காக மீடியாக்களை பயன்படுத்திவந்தது அள்ளும் தரப்பு. வாரத்தில் ஏழு நாட்களில் 5 நாட்கள் அதிமுக பாஜக கூட்டணி குறித்து தான் விவாதம் வைப்பார்கள். மீதி இரண்டு நாட்கள் அதிமுக வை பாஜக உடைக்கிறதா என விவாதம் வைப்பது தான் தமிழக மீடியாக்களின் தற்போது உள்ள நடைமுறை. அதிமுக பாஜக கீழ்மட்ட தொண்டர்களின் மனதளவில் பெரிய பிரிவை உண்டாக்கும் வேளைகளில் ஈடுபட்டது தமிழக மீடியாக்கள். அதற்கெல்லாம் முடிவு கட்டும் விதமாக தேசிய ஜனநாயக கூட்ட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
இது ஒருபுறம் என்றால் டாஸ்மாக் வழக்கு தீவிரமடைந்துள்ளது!தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. இது தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விசாரணை முழுமையாக முடிவடைகின்ற பொழுது, டாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 40,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்குமோ என்று சந்தேகம் எழுகின்றது. செந்தில் பாலாஜியை ‘டார்கெட்’ செய்தே இந்த ரெய்டுகள் தடதடத்திருக்கும் நிலையில், ‘மதுபான சப்ளையில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக’ சொல்கிறது அமலாக்கத்துறை வட்டாரம்! இ இந்த விவகாரத்தை தமிழக மக்களின் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல அண்ணாமலைக்கு அசைமென்ட் கொடுத்துள்ளது டெல்லை வட்டாரம்.
இதற்கிடையே தமிழகம் மழுவதும் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை ஒன்றிணைப்பதும் அதை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டுவர வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்க்கும் உதயநிதிக்கு எதிராக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை எப்படி பயன்படுத்துவது என தேசிய தலைமை ஆலோசித்து வருகிறது. தேசிய அளவில் பொறுப்பு கொடுக்கப்பட்டு கேரளா கர்நாடகா தமிழகம் என மூன்று மாநிலங்களின் தேர்தல் வியூகங்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
கூட்டணி குறித்து தொகுதிகள் பங்கீடு குறித்தும் நயினார் நாகேந்திரன் பார்த்து கொள்வர் தேர்தல் பிரச்சார வியூகங்கள் இளைஞர்களை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவழைப்பது என பல அசைமெண்ட் அண்ணாமலைக்கு வழங்கப்பட உள்ளதாம். மேலும் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள அமைச்சர்களுக்கு எதிராக அண்ணாமலையை பேசவைப்பது திமுக ஊழல்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது போன்ற பணிகளையும் அண்ணாமலை மேற்கொள்ள உள்ளார். செந்தில் பாலாஜி,விஜய், உதயநிதி ஆகியோரின் அரசியல் கனவை முடித்துவைக்க அண்ணாமலைக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது. இனி தமிழகத்தில் அண்ணாமலையின் ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.