நேற்றைய தினம் உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவு மூலம் செந்தில் பாலாஜி வழக்கில் நடந்துவந்த நீயா நானா போட்டி முடிவிற்கு வந்து இருக்கிறது செந்தில் பாலாஜியை அமலாக்க துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில் இன்று அல்லது நாளைக்குள் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கஷ்டடியில் எடுக்க இருப்பதாகவும் இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு குழு தமிழகம் வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது ஒருபுறம் என்றால் நேற்று ஒவ்வொரு ஊடகங்களும் பத்திரிகைகளும் செந்தில் பாலாஜி வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவை முழுமையாக கூறத நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் போட பட்ட தீர்ப்பின் முக்கிய விவரங்கள் வெளிவந்து இருக்கிறது.அதில் நீதிபதி குறிப்பிட்ட 10 முக்கிய உத்தரவுகள் பின்வருமாறு விதிவிலக்கான சூழ்நிலைகளில் நீதிமன்றக் காவல் உத்தரவுக்குப் பிறகு ஹேபியஸ் கார்பஸ் ஏற்கப்படும். ஆனால், ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு விதிவிலக்கான சூழ்நிலைகள் எதுவும் இந்த வழக்கில் இல்லை.
செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம். இந்த விஷயத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்போடு நான் உடன்படுகிறேன்.செந்தில்பாலாஜி கைது குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. தாம் கைது செய்யப்பட்ட காரணம் செந்தில்பாலாஜிக்கு தெரியும். அமலாக்கத்துறை தெரிவித்த விவரங்களை வேண்டுமென்றே ஏற்க மறுத்துவிட்டு, அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்வதை நிராகரிக்கிறேன். அதனால் ஹேபியஸ் கார்பஸ் மனு ஏற்கத் தக்கதல்ல.
செந்தில்பாலாஜியின் கைது மற்றும் அவரது நீதிமன்றக் காவல் சட்ட பூர்வமானது. கைது சரியானது என்பதால் தான் செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்தது.குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தான் நிரபராதி என்று நிரூபிக்க உரிமையுண்டு. ஆனால் விசாரணையைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. செந்தில்பாலாஜி தான் குற்றமற்றவர் என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.சட்டப்படி கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் தான் கஸ்டடி எடுக்க வேண்டும். ஆனால் செந்தில்பாலாஜி உடல் நிலை கருதி மருத்துவமனையில் இருப்பதால், முதல் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் எங்கு நுழைந்து சோதனை செய்யவும், யாரையும் கைது செய்யவும், விசாரணை நடத்தவும் அதிகாரம் உண்டு.அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு காரணமே உச்ச நீதிமன்றத் தீர்ப்புதான். ஆனால் அந்தத் தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் வாதாடிய இரு தரப்புமே நீதிபதிகளிடம் எடுத்து வைக்கவில்லை. அப்படிப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆராயவில்லை என்றால் நான் என் கடமை தவறியவன் ஆகிவிடுவேன்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் செந்தில்பாலாஜி அல்ல. இந்த வழக்குக்கு முன்னோடி வழக்கான போக்குவரத்துக் கழக வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்தான். வளையல்களை அடமானம் வைத்து, ஏன் வீட்டையே அடமானம் வைத்து பணம் கொடுத்த அவர்களின் துயரங்களை நீதிமன்றம் மறந்துவிட முடியாது.அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல என்ற கபில் சிபல் அவர்களின் வாதத்தை ஏற்கிறேன். ஆனால், அமலாக்கத்துறை வழக்குத் தகவல் அறிக்கை (Eபதிவு செய்வதற்கான ED இன் தகுதி ஒருபோதும் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை அல்லது அதன் சட்டபூர்வமான தன்மையும் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை.
அதைக் கேள்வி கேட்காதபோது, விசாரிக்கும் உரிமையும் கேள்விக்கு உள்ளாக்கப்படாது என தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் நீதிபதி.நீதிபதி தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட நபர் செந்தில் பாலாஜி இல்லை செந்தில் பாலாஜியிடம் வேலைக்கு பணம் கொடுத்து அதிலும் நகைகளை வீட்டை அடமானம் வைத்து கொடுத்தவர்கள்தான் என்றும் கூறும் போதே செந்தில் பாலாஜி வழக்கு இனி எந்த திசையில் செல்ல போகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.
நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தி வந்த செந்தில் பாலாஜி வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பு வெளியான காரணத்தால் தற்போது அவரது தம்பியும் அமலாக்கதுறையிடம் சரண் அடைய வேண்டிய சூழல் உண்டாகி இருக்கிறது.இனி இந்த வழக்கில் விசாரணை தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் செந்தில் பாலாஜியை திகார் சிறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த தயாராகி இருக்கிறதாம் சிறப்பு குழு.