24 special

டெல்லி வெடிப்பு ஆதரவு கமெண்ட் போட்டவர்க்ளுக்கு இன்று விழுந்த ஆப்பு. ...! இது தான் சரி ஆட்டம் முடிந்தது

HIMANTABISWASARMA, HIGHCOURT
HIMANTABISWASARMA, HIGHCOURT

டெல்லி குண்டுவெடிப்பு செய்திக்கு சமூகவலைதளத்தில் smiley கமெண்ட் போட்டவர்களை அஸ்ஸாம் போலீஸ் ட்ராக் செய்ய உத்தரவிட்டுள்ளது  இவர்கள் எல்லாம் ஒருவகையில் பயங்கரவாத ஆதரவாளர்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதல்வர்  ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா கூறியுள்ளார். 


டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களின் உயிர்களுக்கு குறிவைத்த பயங்கரவாதிகளுக்கு சிலீப்பர் செல்லாக இருந்து மருத்துவர்கள் சிலர் மூளையாக செயல்பட்டதும் , இது ஒரு தற்கொலை படை தாக்குதல் என்பதும் காவல்துறையினர் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வன்முறையை ஆதரிக்கும் விதமாக பதிவுகள் வெளியிட்டவர்களுக்கு எதிராக அஸ்ஸாம் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து  6 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்கள்  ரபீஜுல் அலி, ஃபரீத் , இனாமுல் இஸ்லாம், அஹமத்,  உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது அம்மாநில அரசு

மேலும்  இது குறித்து  முதலமைச்சர் சர்மா தனது  சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : டெல்லி வெடிப்பை 'கொண்டாடும்' விதமாக பதிவுகள் வெளியிடுபவர்களுக்கு அஸ்ஸாம் அரசு எவ்வித சலுகையும் அளிக்காது. “வன்முறையை மகிழ்விக்கும் செயல்களுக்கும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பதிவுகளுக்கும் எதிராக அஸ்ஸாம் போலீஸ் தளர்ச்சியின்றி நடவடிக்கை எடுக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் டெல்லி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பரவலாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், சமூக வலைதளங்களில் வன்முறைக்கு ஆதரவாக பதிவிட்ட 34 பேர் ‘தீவிரவாத ஆதரவாளர்கள்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் பலரும் தங்கள் கணக்குகளில் பகிர்ந்த பதிவுகள் போலீசார் கண்காணிப்பில்சிக்கியதாலும் , சிலர் கைது செய்யப்பட்டர்கள் என்ற  தகவல் வெளியானதும், தங்களுடைய பதிவுகள் மற்றும் கருத்துகளை நீக்கிக் கொண்டதாகவும் அஸ்ஸாம் மாநில  அரசு கூறியுள்ளது.

மாநிலத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதிக்கும் எந்தவித செயலையும் அஸ்ஸாம் அரசு பொறுத்துக் கொள்ள மாட்டாது என, சமூக வலைதளங்களிலும் சட்டம் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படும் அஸ்ஸாம் மாநில முதல்வர் கூறியுள்ளார்.  டெல்லி குண்டுவெடிப்பை 'ஏளனமாக அல்லது சிரிப்பாக' பதிவு செய்வது கூட தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவே கருதப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்காரணமாக, மாநிலம் முழுவதும் ஆன்லைன் கண்காணிப்பு, புகார் பதிவு, குழுக்கள் மற்றும் தனிநபர்கள் கணக்குகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது தொடர்ச்சியாக சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில், ஆன்லைன் தளங்களில் வன்முறையை பெருமைப்படுத்தும் அல்லது ஆதரிக்கும் செயல்களை ஒழிக்க அஸ்ஸாம் அரசு தீவிரமான பணி மேற்கொள்வதை இக்கைது தொடர் தெளிவுபடுத்துகிறது. இதே போல் தமிழ்கத்தில் உள்ளவர்களையம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. மேலும் தனி குழுவையும் அமைத்துள்ளாதாம்.