கடந்த 19ஆம் தேதி சென்னையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்த பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த நேர்காணல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டதற்கு உதயநிதி நேர்காணல் குறித்தும் அந்த நேர்காணலை எடுத்து பத்திரிகையாளரை குறித்தும் அண்ணாமலை விமர்சித்து பேசியது பத்திரிகையாளர்கள் தரப்பை கோபப்படுத்தியது. அதனால் அப்பொழுதே அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தரப்பில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது ஆனால் அண்ணாமலை அதற்கு மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து அண்ணாமலையின் இந்த நடவடிக்கையை கண்டித்து மாலை 4 மணி அளவில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலையதள பக்கத்தில், எனக்கு எதிராகக் களமிறக்கப்பட்டுள்ள, திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு என்று பரவலாக அறியப்பட்டவர்கள், இன்றைய தினம் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை அறிகிறேன். இன்றைய ஆர்ப்பாட்டம், கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு எதிராக இந்தக் கும்பலால் நடத்தப்படும் மூன்றாவது ஆர்ப்பாட்டமாகும். இதனை நான் பெருமையாகவே கருதுகிறேன்.தாங்கள் ஒரு பத்திரிகையாளர் என்பதை மறந்துவிட்டு, திமுகவின் செய்தித் தொடர்பாளர் போல் நடந்து கொள்ளும், வெங்காயத்தின் முதல் அடுக்கான இவர்களின் உண்மை நிலைப்பாடு குறித்த சில எடுத்துக்காட்டுகள் இதோ என இந்து குடும்பத்தைச் சேர்ந்த ராம், மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் போன்ற பத்திரிகையாளர்கள் திமுக குறித்து கூறிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை பகிர்ந்து பதிவிட்டிருந்தார்.
மேலும் பத்திரிக்கையாளர்கள் வேஷம் போட்ட இந்த சில திமுக அடிவருடிகளால், இனியும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கை முடிவு செய்யவோ, கட்டுப்படுத்தவோ முடியாது.தங்கள் உயிரைப் பணயம் வைத்து, மக்கள் பிரச்சினைகளை வெளிக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களுடன் தோளோடு தோள் நிற்கிறேன். அதே நேரத்தில், ஆளும் திமுக அரசை மகிழ்விக்கும் பிரச்சார இயந்திரமாகச் செயல்படுபவர்களை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறைக்கே அவமானம் என்று அந்த பதிவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டது பேசு பொருளானது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து பத்திரிக்கையாளர் தரப்பில் நடத்தப்பட்ட கூட்டம் முடிந்த பிறகு மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் எங்கிருக்கிறார் என்றும், அவர் சம்பந்தமான செய்தி இருக்கிறதா என்றும், அவரின் சந்திப்பு நிகழ்ச்சி கிடைக்குமா என்றும், இன்றைய காலகட்டத்தில் அண்ணாமலை பற்றிய செய்தி இல்லையென்றால் பத்திரிக்கை நடத்த முடியாது என்றும், ஒரு பத்திரிக்கையாளர் தொலைபேசியில் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தாராம்! இதனை மற்ற பத்திரிக்கையாளர் ஒருவரை கூறியுள்ளார். எது நடந்தாலும் அண்ணாமலையின்றி தமிழகத்தில் வேறு பரபரப்பான நியூஸ் கிடையாது! எனவே அவரை அனுசரித்து செல்ல வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
முன்னதாக இதே அண்ணாமலை தான் திருப்பூரில் தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்த நேச பிரபுவை அடையாளம் தெரியாத நபர்கள் அறிவாளால் வெட்டியதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்! அப்படி செய்தியாளர் ஒருவருக்கு நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த ஒருவர் தற்போது எப்படி பத்திரிகையாளரை தேவையில்லாமல் விமர்சிப்பார் என்ற பேச்சுக்களும் இணையத்தில் உலா வருகிறது.