24 special

வருமான வரித்துறை வளையில் சிக்கிய அமைச்சர்?...தொடரும் பரபரப்பு சோதனை!

ev velu
ev velu

வரிஏய்ப்பு செய்த புகாரின் பேரில் நேற்று காலை முதல் திமுக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலுவுக்கு தொடர்புடைய 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர். இன்று இரண்டாவது நாளாக சோதனை கையில் எடுத்துள்ளனர். தமிழகத்தில் முக்கிய பொறுப்பாக்களில் இருக்கும் அமைச்சர்களை கடந்த சில தினங்களாக அமலாக்கத்துறை பார்வை விழுந்துள்ளது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலும் நேற்று முதல் சிக்கினார்.


எ.வ வேலுவுக்கு சொந்தமான பல இடங்களில் சல்லடை போட்டு தேட ஆரம்பித்தனர். இவரின் பொதுப்பணி துறையில் ஊழல் செய்ததாகவும் மற்றும் வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரிலும் இந்த சோதனையை தொடங்கினர்.நேற்று முதல் சென்னை, திருவண்ணாமலை, கரூர் மற்றும் கோவையில் அதிரடியாக சோதனை செய்தனர். அதிலும் கோவையில் இவருக்கு நெருங்கிய சொந்தமான மீனா ஜெயகுமார் சொந்தமான இடத்தில் சோதனை செய்ததில் முக்கிய ஆவணம் சிக்கியதாக தெரிந்தது.  

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலையில் எ.வ வேலு மகன் கம்பனின் வீடு திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ளது. அங்கு நேற்று பின்னிரவு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். விடிந்தும் சோதன தொடர்கிறது. சோதனை நடைபெறுவதை ஒட்டி அமைச்சர் மகன் வீட்டில் சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை.

சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா போன்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இரண்டாவது நாளாக திருவண்ணாமலையில் உள்ள காண்ட்ராக்டர் வெங்கட் என்பவர் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்து வரும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருவண்ணாமலை பகுதியில் பரப்பாரு நிலவி வருகிறது. 

இதுவரை இந்த சோதனையில் பல டிஜிட்டல் தரவுகள், முக்கிய ஆவணங்கள்சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் 24 மணிநேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதால் சென்னை, கோவை, கரூரில் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் இடையே பதற்றம் நிலவி காணப்படுகின்றனர்.

கடந்த 2021ல் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் திருவண்ணாமலையில் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களை தொடர்ந்து அமலாக்கத்துறை  குறி வைத்து வரும் நிலையில் சாதாரண மனிதனாக இருந்த எ.வ வேலு மீது வருமான வரித்துறை திசை திரும்பியதால் இந்த சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கின்றனர். இந்த சோதனை மேலும் இரண்டு தினங்களுக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.