
நடிப்பால் தமிழகம் முழுவதும் அதிக ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நல குறைவால் உயிர் இழந்தார். இவரது இழப்பு தமிழ் திரை உலகையும் தமிழ் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, மேலும் தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் இறப்பிற்கு குவிந்த மக்கள் கூட்டத்தை ஒத்தான மக்கள் கூட்டம் விஜயகாந்தின் இறுதி சடங்கிலும் வந்தது விஜயகாந்தின் உண்மை மனதை வெளிகாட்டியது. இதனால் சமூக வலைதளங்கள் முழுவதுமே விஜயகாந்த் குறித்த செய்திகளும் விஜயகாந்தின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் பதிவுகள் மட்டுமே நிரம்பி வழிந்தது. கேப்டனின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டிருந்தது தமிழகத்தில் மிகப்பெரிய திரை ஜாம்பவான்களும் நேரில் வந்து கேப்டனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.
மேலும் கேப்டனின் இறப்பு தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! இனி இவரைப் போன்ற மனிதரை திரை உலகம் எப்படி மீண்டும் காணும் என்ற வேதனையில் இவருடன் நடித்த சகா நடிகர்கள் கண்ணீர் மல்க செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். ஏனென்றால் இவர் சினிமா துறையில் இருக்கும் பொழுதும் பல உதவிகளை சினிமா துறையில் இருப்பவர்களுக்கு செய்திருக்கிறார், அதோடு பலர் தற்பொழுது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு உறுதுணையாகவும் அதற்கு வழியாகவும் இருந்தவர் கேப்டன் அந்த வகையில் விஜய்யும் இந்த அளவிற்கு உயர்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் விஜயகாந்த் அதேபோன்று நடிகர் சூர்யாவும் தமிழ் திரை முக்கிய நடிகராக மாறியதற்கு பெரிதும் உதவி புரிந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஏனென்றால் சூர்யா தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த முதல் ஏழு படங்களில் துணை நடிகராகவும் பெருமளவிலான வரவேற்பையும் பெறாமல் இருந்தார் ஆனால் கேப்டன் விஜயகாந்த் சூர்யாவின் பெரிய அண்ணா படத்தில் இணைந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் செல்வாக்கையும் சூர்யாவிற்கு பெற்றுக் கொடுத்தார்.
அதற்கு பிறகு பல நேரங்களில் சிவக்குமார் குடும்பத்திற்கும் நெருங்கியவராகவும் நண்பராகவும் இருந்து வந்தவர் விஜயகாந்த் இந்த நிலையில் விஜயகாந்தின் இறுதி சடங்கில் சிவகுமார் குடும்பமே கலந்து கொள்ளாமல் இருந்தது தமிழ் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் சூர்யா வெளிநாட்டில் இருக்கும் பொழுது இது போன்ற அசம்பாவிதம் நடந்ததாகவும் அதனால் தன்னால் வர முடியவில்லை என்றும் விஜயகாந்தின் இறப்பு குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டு இருந்தார் சூரியா!. இதுவும் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை பெற்றது அந்த விமர்சனத்திற்கு பதிலாக கங்குவா படத்தில் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயங்களாலே சூர்யாவால் தமிழகத்திற்கு திரும்ப முடியவில்லை என்று சூர்யா தரப்பில் கூறப்பட்டாலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது மனைவியுடன் வெளிநாட்டுகளுக்கு சென்று விட்டு இதுபோன்று சமாளிப்பை சூர்யா தரப்பு செய்து வருவதாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேப்டன் இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு சென்னை திரும்பிய சூர்யா முதல் வேலையாக விஜயகாந்தின் சமாதியை காண சென்றுள்ளார்! மேலும் அங்கு சில மணி நேரங்களில் இருந்து சூர்யா கண்ணீர் மல்க விஜயகாந்த் இழப்பிற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார் இதற்குப் பிறகு சிறிது நேரம் அமர்ந்தும் கேப்டனின் இறப்பை நினைத்து சூர்யா அழுகும் காட்சிகள் கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது ஆனால் சூர்யா வந்தது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் உலாவருகிறது அதாவது கலைஞர் 100 நிகழ்ச்சிக்கு கலந்துகொள்வதற்காகத்தான் சூர்யா வந்துள்ளார் அதற்கும் வராமல் இருந்திருப்பார் ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் இருந்து சற்று மிரட்டும் தோனியில் அழைப்பு சென்ற காரணத்தினால் சூர்யா வந்திருக்கலாம் என தகவல்கள் உலா வருகிறது...