
தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை திமுக ஏற்றதில் இருந்து பல சரிவுகளை திமுக சந்தித்து வருகிறது அதிலும் குறிப்பாக திமுக தேர்தலுக்கு முன்பாக கொடுத்த ஒரு வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதனால் கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழகத்தில் முக்கிய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் தரப்பில் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது, வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி கூட போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டே சென்று சமூக வலைதளம் முழுவதும் அவரது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் பேசப்பட்டு திமுகவின் இரு முக்கிய அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்..
முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிறை சென்றார் தற்பொழுது அமைச்சராக இருந்த பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்து தண்டனை பெற்றுள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாகவே அமைச்சர்களான துரைமுருகன், காந்தி போன்றோர் அடுத்த பட்டியலில் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் வெளியே தான் இப்படி நடக்கிறது என்றால் கட்சிக்குள்ளும் தற்பொழுது சுமூக நிலை நிலவவில்லை என்று கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக திமுக கவுன்சிலர் மற்றும் மேயர் கிடையாது வாக்குவாதங்கள் சண்டைகள் ஒவ்வொரு தொகுதியிலும் நடப்பதாகவும் கவுன்சிலருக்கு உள்ளேயே பல வாக்குவாதங்கள் நடப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் முதல்வர் தங்களை வந்து பார்ப்பதே இல்லை என்று அறிவாலயத்தில் குமுறி வருகின்றனர்.
இப்படி கட்சியின் உள் விரிசலை சமாளிப்பதற்காகவே திமுகவின் மூத்த அமைச்சர்கள் அவ்வப்போது தொகுதி நிர்வாகிகளை சந்தித்து சமாதானப்படுத்தி விட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இளைஞர் அணி தலைவராக பொறுப்பேற்கப்பட்ட முதல்வர் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது அமைச்சராக உருவெடுத்துள்ளார் இன்னும் சில மாதங்களில் அவரை துணை முதலமைச்சராக மாற்றுவதற்கும் அவரது ஆதரவாளர்கள் துடித்துக் கொண்டு வருகின்றனர். ஆனால் அமைச்சர் உதயநிதியை போன்று தூத்துக்குடி எம்பி கனிமொழியும் கருணாநிதியின் வம்சாவளியை சேர்ந்தவர் இருப்பினும் கனிமொழிக்கு திமுகவில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட கனிமொழிக்கு வழங்கப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு கனிமொழியை தலைமை ஏற்க வா! என்ற வாக்கியங்கள் நிறைந்த போஸ்டர்கள் கனிமொழியின் பிறந்த நாள் அன்று திடீர் திடீர் ஆங்காங்கே முளைத்துள்ளது.
அதுமட்டுமின்றி இதுவரை இல்லாத அளவில் கனிமொழிக்கு வரும் பிறந்தநாள் வாழ்த்துக்களும் அதிகமாக குவிந்துள்ளது, திமுக அமைச்சர் சேகர்பாபுவின் ஆதரவாளர்கள் வேறு கனிமொழிக்கு வாழ்த்து கூறி போஸ்டர் ஒட்டி இருந்தனர். மேலும் நடிகர் விஜய் வேறு கனிமொழியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியது மட்டுமின்றி கனிமொழியின் தயார் உடல்நிலை குறித்தும் விஜய் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளுக்கு கூட விஜய் வாழ்த்து தெரிவித்தாக தகவல்கள் வெளியாகவில்லை! ஆனால் தற்பொழுது கனிமொழியின் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருப்பது அரசியலில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே திமுகவில் உட்கட்சி பிரச்சனைகள் இருக்கும் வேளையில் கனிமொழியை தலைமை ஏற்க வா என உடன்பிறப்புகள் கூறுவதும், விஜய் வேறு வாழ்ந்து சொல்லி இருப்பதும் கனிமொழி தலைமைக்கு வர வேண்டும் என விஜய் ஆதரவு தெரிவிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுமட்டுமில்லாமல் விஜய் மற்றும் ரெட் ஜெயண்ட் இடையிலான சில உரசல்கள் தான் இப்படி கனிமொழிக்கு விஜய் ஆதரவு கொடுக்க காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது..