24 special

திருமாவளவன் செய்த கமெண்ட்டால் அதிர்ந்து போன சிறுத்தைகள்

Thirumavalavan
Thirumavalavan

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் தற்போது திமுக கூட்டணியில் எம்பி யாக உள்ளார். இதற்கு முன்பு அதிமுக கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் இரண்டு தொகுதி மட்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


பிறகு 2009 ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். பின்னர் 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்பி ஆக உள்ளார். 

சமூக வலைதளத்தில் தற்போது அனைத்து அரசியல் தலைவர்களும் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகளை ஆரம்பித்து அதில் தினந்தோறும் ஆக்டிவாக பதிவிட்டு வருகின்றனர் அரசியல் தலைவர்கள். ஒரு சிலர் அட்மின் வைத்து பதிவுகளை மேற்கொள்கிறார்கள் ஒரு சிலர் தானாகவே அந்த சமூக வலைதள பக்கத்தை கையாண்டு வருகின்றனர். இப்படி ஒரு சூழலில் பேஸ்புக்கில் வெளிவந்த பதிவு ஒன்றிற்கு திருமாவளவன் பதில் போட்டது விவகாரத்தை மட்டுமல்ல வில்லங்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

என்ன பதிவு என்றால், பேஸ்புக்கில் 100 சிரிப்புகள் இலவசம் என்ற பக்கத்தில் இருந்து வந்த மீம்ஸ் ஒன்றை பார்த்து அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கமெண்ட் செய்துள்ளார். சண்டை போட்டு பேசாமல் இருக்கும் காலம் போய் பேசினால் சண்டை வரும் என்று பயந்து பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம் என்பதுதான் அந்த மீம். இந்த மிம்ஸ்க்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர்  லைக் செய்தனர், 400 க்கு  மேற்பட்டோர் பகிர்ந்துள்ளனர். 

அப்படிப்பட்ட இந்த மீம்ஸ்க்குதான் திருமாவளவன் 'ஆமாம்' என்று பதிலளித்துள்ளார். திருமாவளவனின் இந்த கமெண்டுக்கு கீழே பலர் வியப்புடன் கமெண்ட் செய்திருந்தனர். அதாவது நாகராஜன் என்பவர் இது கற்பனையா இல்ல கனவா தெரியவில்லையே ஆச்சரியமாக உள்ளது, கமெண்ட்ல தலைவர் வந்துள்ளாரே, என்ன அண்ணா கமெண்ட் எல்லாம் பண்றீங்க என்று மணி வாசகம் என்பவர், உண்மை தலைவரே என்று ஃபயாஸ் என பல இப்படி திருமாவளவனின் அதிகாரப்பூர்வ பக்கத்துல இருந்து பதியப்பட்டிருந்த பதிவிற்கு கீழ கமெண்ட் செய்தது நேற்று இரவு நேரத்தில் சமூக வலைத்தளத்தை பிஸியாக வைத்திருந்தது. 

மேலும் இந்த கமெண்டின் மூலம் திமுகவுடன் உள்ள கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு மறைமுகமாக திருமாவளவன் சம்மதிக்கும் வகையில் இந்த கமெண்ட் கொடுத்துள்ளார் என்றும் சிலர் யூகங்களாக கூறி வருகின்றனர். அதாவது தற்போது கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அவ்வப்போது மோதல்கள் இருந்து கொண்டு வருகிற நிலையில் அதிமுக மற்றும் பாஜக தரப்பினர் விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிலிருந்து விலகும் என்று தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாஜகவின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பாஜகவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைய வேண்டும் என்று நேரடியாக அழைத்திருந்தார். அதேபோன்று நாம் தமிழர் கட்சி சீமானும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

திருமாவளவன் செய்த கமெண்ட் நள்ளிரவு வரை இருந்த சமயத்தில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. திருமாவளவனா!  இப்படி கமெண்ட் செய்துள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள  சிலரே அதிர்ச்சியடைந்து, பதிலுக்கு தன்னுடைய கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். இதற்கு முன்பு திருமாவளவன் ட்விட்டரில் ஆபாச ஐடி ஒன்ரை பின் தொடர்ந்து சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.