ஈரோடு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னிமலை முருகன் கோயிலில் இருந்து, பழனி முருகன் கோவில் வரை வேல் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித், முன்னாள் காவல் துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் ஏராளமான இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வேல்களுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான் என்றார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவர், நாட்டைக் காப்பாற்ற ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும் சந்தோசம் தான் எனத் தெரிவித்தார். நடிகர் விஜயகாந்த் காலமானதிற்கு நடிகர் வடிவேலு தனிப்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வடிவேலு வராமல் இருந்திருக்கலாம் ஆனால், தன்னை பொறுத்தவரையில் வெறும் அறிக்கையாவது வடிவேலு தந்திருக்கலாம் என்று கூறினார் ரஞ்சித்., ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு அமர்ந்து விடுவார்கள் என்றார். அவர் சுட்டி காட்டியது தமிழா அரசியலில் இருக்க கூடியவர்களை என்று தான் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.
தொடர்ந்து, யாருமே இது வரை ஒன்றுமே செய்யவிலை என்று சுட்டிக்காட்டி எல்லாமே வெறும் அறிக்கை தான் விமர்சனம் செய்தார். எதற்கெடுத்தாலும் அறிக்கை விட்டால் மட்டும் போதுமா? என்பதை தெளிவாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார் என கருத்து வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஞ்சித் ஹாப்பி ஸ்ட்ரீட் மூலம் வளர்ந்து வரும் இளைஞர்களை சீர் குழைப்பதாக கருத்து தெரிவித்து இருந்தார். இப்போதும் வரும் கால இளைஞர்கள் அனைவர்க்கும் அரசியல் தெரியவேண்டும் என குறிப்பிட்டு, படித்த இளைஞர்கள் படித்து வேலையில்லாமல் இருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.
நடிகர் ரஞ்சித் இந்த கருத்துக்கு பலரும் வரவேற்றுள்ளனர், அதாவது தமிழக அரசு எந்த சம்பவம் நடந்தாலும் அறிக்கை வெளியிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அரசு டாஸ்மாக் கடையில் சைனாடு கலந்த மதுவை குடித்து இறந்த நபர்களுக்கு நிவாரண தொகை மற்றும் அறிக்கை மூலம் அவரது குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்த தமிழக அரசு அந்த மதுவில் எப்படி சைனாடு வந்து இருக்கும் என நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இவரை போல் அனைத்து நடிகர்களும் அரசின் செயல்பாடு குறித்து பேச வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.