24 special

முதல்வர் முன்னிலையில் மோடி செய்த தரமான சம்பவம்....! வாயடைத்து ஒதுங்கிய ஸ்டாலின்!

PM Modi, CM Stalin
PM Modi, CM Stalin

2024ல் முதல் மாநிலமாக தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்ட பாராத பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சிக்கு வந்தார். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த மோடிக்கு கருப்பு கொடி ஏந்தியும், கோ பேக் மோடி என பளுவுன்கள் பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த முறை தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படத்தோடு மேடையில் நடந்ததை கண்டு வாயடைத்து போய்விட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். 


பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டின் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திறங்கினார். ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவரை வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதையடுத்து ரூ1,100 கோடியிலான திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ரூ20,140 கோடி மதிப்பிலான 20 திட்டங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த விழா திருச்சி விமான நிலையத்தில் நடந்தது இதில் மத்திய அமைச்சர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில் பாஜகவினர், ‛‛மோடி.. மோடி..'' என இடைவிடாது கோஷமிட்டனர். இந்த கோஷம் அரங்கத்தை அதிர வைத்தது. இதனால் முதல்வர் ஸ்டாலின் சில வினாடிகள் அப்படியே மைக் முன்பு பேசாமல் நின்றார். அதன்பிறகு ஸ்டாலின் பேச தொடங்கினார். அப்போதும் ’மோடி.. மோடி..’ என்ற கோஷம் தொடர்ந்து ஒலித்தது. இதனால் ஸ்டாலின் பேசுவது சரியாக கேட்காத நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த பிரதமர் மோடி மேடையில் தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்தபடியே கோஷத்தை நிறுத்தும்படி தனது கையை அசைத்து சைகை செய்தார். இதையடுத்து படிப்படியாக ‛‛மோடி.. மோடி'' கோஷம் நின்றது. அதன்பிறகு ஸ்டாலின் பேச்சு தெளிவாக கேட்டது.

அதன் பிறகு பேசிய பிரதமர் மோடி. தமிழகத்திற்கு மத்திய அரசு குறைந்த நிதியை தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வரை மேடையில் வைத்து கொண்டே, "வரலாறு காணாத வகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு இரண்டரை மடங்குஅதிக நிதி வழங்குகிறது. மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு ரேஷனில் இலவசமாக பொருட்கள் கிடைக்கின்ற" என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதனால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு என நினைத்து பம்பினார். எப்போதும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதர்கள் இடையில் முதலமைச்சர் முன்னாடி மோடி மோடி என கோஷம் எழுப்பிய பாஜகவினர் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கியது.