Cinema

தமிழை தவிர்க்கிறாரா விஜய்?....கொண்டாடும் அஜித் ரசிகர்கள்...திண்டாடும் விஜய் ரசிகர்கள்!

Ajith, Vijay
Ajith, Vijay

சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் என அவரது ரசிகர்கள் கொண்டாடினர் ஆனால் விஜய் ஒரு பட்டத்திற்கு ஒருவர் தான் என அந்த சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். அரசியலில் ஆர்வம் கொண்டுள்ள நடிகர் விஜய் அதற்கான செய்லபாடுகளையும் முன்னெடுத்து வருகிறார்.  ஒரு பக்கம் சினிமாவிலும் ஆர்வம் காட்டி வரும் விஜய் தற்போது அவரது படத்தின் மூலம் விமர்சனம் எழுந்துள்ளது.


நடிகர் விஜய் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, அவர் அரசியலுக்கு வருகிறார் என்று சொன்னதில் இருந்து அவரின் செயல்பாடுகள் வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக நெல்லை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய போது அடுத்த எம்ஜிஆர் என்ற பெயரும் பெற்றார் விஜய். இப்போது அவர் பிசியாக தளபதி 68 படத்தில் நடித்து வரும் விஜய் மீது தொடர்ந்து தமிழை தவிர்த்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. தளபதி விஜய் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஹிந்தி ஆகிய மாநிலத்தில் ஏராளமான ரசிகர்களை வியாத்துள்ளார். தற்போது வெளிநாட்டு அதாவது ஹாலிவுட் ரசிகர்களை கவர தமிழை தவிர்த்து வருகிறார் என்ற விமர்சனம் வந்துள்ளது. இதனால் அஜித் ரசிங்கர்கள் குஷியில் உள்ளனர்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தொடர் படங்கள் எல்லாம் ஆங்கில மொழியில் தலைப்பு வைத்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வந்த மாஸ்டர் படமும் ஆங்கில சொல்லாக இருந்தது.  இந்த படம் வெற்றி படமாக அமைத்தாலும், அடுத்ததாக புதுமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனம் பெற்றது அதன் படத்தின் தலைப்பும் ஆங்கிலத்தில் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான லியோ படமும் வெளியாகி தோல்வி படமாக அமைந்தது அந்த படத்தின் தலைப்பும் ஆங்கிலத்தில் இடம் பெற்றது. இப்படி தொடர் தோல்வி படங்களை கொடுத்த விஜய் அடுத்ததாக ஹிட் படமாக கொடுக்க  இயக்குனர்களை தேடி வந்தார். 

அதன்படி, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 என பெயரிடப்படாத படமாக ஷூட்டிங் வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்திற்கான பெயர் இணையத்தில் பலவகையில் பேசப்பட்டது. 2024ம் ஆண்டை முன்னிட்டு தாளிப்பு வெளியானது அதில் தி கிரெடேஸ்ட் ஆப் ஆல் டைம் என ஆங்கிலத்தில் பெயர் வெளியானது. இதனை விஜய் ரசிங்கர்கள் கொண்டாடினாலும் என்ன தலைப்பு என சிந்தித்து வருகின்றனர். அதிலும், விஜய் ஏன் இப்படி தொடர்ந்து ஆங்கில மொழி கொண்டு தலைப்பு தேர்வு செய்கிறார் என கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு போட்டியான நடிகர் அஜித் படத்தின் தலைப்பு நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, விடாமுயற்சி என தொடர்ந்து தமிழ் மொழியின் மீது உள்ள பற்றுவை கொண்டு வைத்து வருகிறார். ஆனால், விஜய் ஏன் இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு தேர்வு செய்கிறார் என அவரது ரசிங்கர்களே குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் சினிமாவில் உள்ள சிலர் கூறுவது விஜய்க்கு பண பலம் எல்லாம் வருவது வெளி நாடுகளில் இருந்து அவர் அரசியலுக்கு வந்ததும் மொத்தமாக பணம் எல்லாம் விஜய்க்கு வெளிநாடுகளில் இருந்து தான் வரவுள்ளது. அது காரணமாகவே விஜய்க்கு அந்த அமைப்பு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட கட்டளை இட்டு வருவதாக தகவல் கூறுகின்றனர். இதனால் தான் விஜய் படத்திற்கு பெயர் ஆங்கிலத்தில் சூட்டி வருவதாக தகவல் கசிந்துள்ளன. அஜித் அரசியல் ஆசை இல்லாமல் தனியாக சாதித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாடத்திலும், விஜய் ரசிங்கர்கள் திண்டாடத்திலும் இருந்து வருகின்றனர்.