24 special

ராகுல் ஒற்றுமை பயணத்தை ஒரே நாளில் சோலியை முடித்த பாதிரியார்...?

Rahul gandhi, father
Rahul gandhi, father

தமிழகத்தில் ஒற்றுமை நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி இரண்டு திட்டங்களை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் நடைப்பயணத்தை தொடங்கினார் அந்த வகையில் ராகுல் காந்தி தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களிடம் வரவேற்பை பெற திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார்களாம்.


இது ஒருபுறம் என்றால் எந்த முத்திரை தன் மீது விழகூடாது என ராகுல் காந்தி எதிர்பார்த்து காத்து இருந்தாரோ அது இன்றைய தினம் நடந்துவிட்டது, கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை பல்வேறு தலைவர்கள் சந்தித்த நிலையில் குறிப்பாக பாதிரியார்கள் சந்தித்து வருகின்றனர்.

இங்குதான் புது சர்ச்சை உண்டாகி இருக்கிறது, இன்றைய தினம் ராகுல் காந்தியை சர்ச்சை பாதிரியார் ஜார்ச் பொன்னய்யா சந்தித்த செய்தி நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது, இந்த ஜார்ஜ் பொன்னய்யா கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்பு போராட்டத்தில் பேசிய பேச்சுக்கள் அவரை சிறையில் தள்ளியது.

`தி.மு.க ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சட்டை போடாமல் சுசீந்திரம் கோயிலுக்குப் போகிறார்கள். நாங்கள் சர்ச்சுக்கு கோட் போட்டுக்கொண்டு, டை அணிந்துகொண்டு போவோம். என்னதான் நீங்கள் கோயிலுக்குப் போனாலும் இந்துக்கள் உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்று பேசியவர்.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ காலில் செருப்பு போடாமல் நடக்கிறார். பாரத மாதாவை அவர் செருப்பு போட்டு மிதிக்க மாட்டாராம். ஆனால் பாரதமாதாவின் அசிங்கம் நம் மீது பட்டு, சொறி சிரங்கு ஏற்படாமலிருக்க நாம் ஷூ போட்டுக்கொண்டு நடக்கிறோம். பாரதமாதா ரொம்ப டேஞ்சர் என்று பேசியதுடன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் தரக்குறைவாக விமர்சித்தார் அதன் பிறகு தலைமறைவாக இருந்த பொன்னய்யா கைது செய்யபட்டு பின்பு பிணையில் வெளிவந்தார்.

இந்த சூழலில் பாரத மாதா தொடங்கி இந்து நம்பிக்கை வரை அவதூறாக பேசிய பாதிரியாரை ராகுல் சந்தித்தது இந்திய அளவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உண்டாக்கி இருக்கிறது, காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று என்றைக்கு முத்திரை விழுந்ததோ அன்றில் இருந்து காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை என்று நிரூபணம் செய்யதான் ராகுல் யாத்திரையே தொடங்கி இருக்கிறாராம், ஆனால் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சந்திப்பு மூலம் ராகுலின் திட்டம் தவிடு பொடியாகி இருக்கிறது.

போதாத குறைக்கு கூட்டணி கட்சியான திமுகவை ஜார்ஜ் பொன்னய்யா கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார் அவரை ராகுலிடம் அழைத்து சென்றதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் உள்ளே இருந்தே கருப்பு ஆடுகள் காங்கிரஸ் சோலியை முடிக்க பார்க்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே ராகுலின் ஒற்றுமை நடை பயணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள சொகுசு கேரவன்கள் ஒரு பக்கம், முகம் சுழிக்க செய்துள்ள நிலையில் தற்போது பாரத மாதா, இந்துக்களை இழிவாக பேசிய பாதிரியாரை ராகுல் சந்தித்தது ஒற்றுமை பயணத்தின் நோக்கமான ஒற்றுமை திட்டத்திற்கு முடிவுரை எழுதியுள்ளது.

தமிழகத்தில் உள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா இல்லையா என்பதே வரும் நாட்களில்தான் தெரியும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.