24 special

புஸ்ஸாகிப்போன பொதுக்குழு..! அவசரமாக வெளியேறிய ஓபிஎஸ்..!

Ops and eps
Ops and eps

சென்னை : ஒற்றைத்தலைமையா இரட்டைத்தலைமையா என கோஷ்டி மோதலில் தொடங்கிய பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியிருந்த நிலையில் ஒருமுடிவும் எட்டப்படாமல் வெறும் அரைமணித்துளிகளிலேயே நிறைவுபெற்றது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.


பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாச்சலம் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. மேடையில் வெகு சில முன்னாள் அமைச்சர்களே அமர்ந்திருந்தனர். மேலும் ஓபிஎஸ் க்கு ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். இந்த கூட்டத்திற்கு பெரும்பாலும்  ஓபிஎஸ் ஆதரவாளர்களே அழைக்கப்பட்டிருந்ததாக தற்போது சலசலப்பு எழுந்துள்ளது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை ஏற்கப்பட்டது.

கோரிக்கை ஏற்கப்பட்டதையடுத்து எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுக்குழு நிர்வாகிகள் பூங்கொத்துக்கள் மற்றும் மலர்மாலை அணிவித்தனர். மேலும் எடப்பாடிக்கு வீரவாளும் வெள்ளிகிரீடமும் பரிசளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் தொடங்கிய உடனே ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதை உடனடியாக பொதுக்குழு ஏற்றுக்கொண்டதுடன்  அடுத்த பொதுகுழுக்கூட்டம் அடுத்தமாதம் 11 அன்று நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அறிவிப்புக்கள் செய்யப்படும்போதே அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மேடையிலிருந்து அவசரமாக இறங்கி வெளிறினார். அவரது ஆதரவாளர்கள் பலர் கோஷமிட்டவாறே வெளிநடப்பு செய்ததாக தெரிகிறது. போதாக்குறைக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என கூறினார். இந்த கூட்டம் பல கோஷங்கள் முழக்கங்களுக்கிடையில் அரைமணி நேரத்திலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.