இப்போதெல்லாம் நம்மிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ இ எம் ஐ வாங்கிக் கொள்ளலாம் என பல ஆயிரம் பல லட்சம் மதிப்பில் ஆன பொருட்களையும் எளிதில் வாங்கி விட்டு அதற்கான இஎம்ஐயை முக்கி தக்கியாவது கட்டி வருகிறோம்! சரி இறுதியில் எப்படியோ அந்த பொருள் நமக்கு சொந்தமானதாக மாறுகிறது என்று பலர் தற்போது இந்த இஎம்ஐயில் வாங்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் அந்த இஎம்ஐ முடிவதற்குள்ளே நீங்கள் வாங்கி இருக்கும் அந்த பொருள் பழுதடைந்தாலும் காணாமல் போனாலும் திருடப்பட்டாலோ எவ்வளவு வேதனை கொடுக்கும் அதே போன்று தான் நாம் முழு பணத்தை செலுத்தி வாங்கி இருக்கிற பொருளும் காணாமல் போனால் பெரும் கவலை நம்மை சூழ்ந்து கொள்ளும் பொருட்கள் மட்டும் இன்றி பணம் நகை என அனைத்தும் தற்போது சர்வ சாதாரணமாக திருடப்படுகிறது, இதனை தடுக்க பல விதமான பூட்டுகளையும் டெக்னாலஜியை பயன்படுத்தியும் பூட்டி வைத்து விட்டால் கூட இன்றைய காலத்து திருடர்கள் அதனை எளிதில் தகர்த்தெறிந்து தனக்கு வேண்டியவற்றை திருடி விட்டு செல்கிறார்கள், இதனால் தற்போது வீட்டில் பணம் நகை வைப்பதற்கும் பயமாக இருக்கிறது அதேபோன்று டிவி வாஷிங் மெஷின் லேப்டாப் செல்போன் போன்றவற்றையும் வைப்பதற்கும் பயமாக இருக்கிறது!
சமீபத்தில் கூட பூட்டி இருக்கும் வீட்டை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சத்தமும் இல்லாமல் எப்படி எளிதாக திறக்கலாம் என்பது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது அந்த வீடியோவில் பூட்டப்பட்டிருந்த பூட்டில் மண்ணெணையை ஊற்றி தீயை பற்ற வைத்து சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு கல்லை வைத்து அந்த பூட்டை லேசாக தட்டினால் அந்த பூட்டு திறந்து விடுகிறது நினைத்து பாருங்கள் இந்த முறையை அனைவரும் தற்போது உபயோகப்படுத்தினால் எப்படி நாம் நிம்மதியாக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று வர முடியும்?, இதற்காக சில வீட்டில் ஒரு உயர்ந்த பொருளை வாங்கி வைப்பதற்கே யோசனை செய்து வருகிறார்கள்! சரி வீட்டில் தான் இது போன்று திரட்டுகள் நடக்கிறது என்றால் பெரிய பெரிய நிறுவனங்களிலும் மருத்துவமனைகளிலும் வங்கிகளிலும் திருமணம் மண்டபங்களிலும் கல்லூரி விடுதிகளிலும் பொது விடுதிகளிலும் திருட்டுகள் வலுவெடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி வேலை இழந்த பல இளைஞர்கள் கூட இந்த திருட்டு தற்போது இறங்கி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி வருவது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது, ஏனென்றால் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் சில இளைஞர்கள் இப்படி திருட்டுப்பக்கம் திரும்பினால் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?? இப்படி ஒரு அதிர்ச்சிகர கேள்வியை முன் வைக்கிற வகையில் தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
அதாவது 26 வயதான ஜெசி அகர்வால் நொய்டாவை சேர்ந்தவர் அவர் தனது படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்பொழுது கொரோனா காலகட்டத்தின் சமயத்தில் அவருக்கு வேலை பறிபோய் உள்ளது. இதனை அடுத்து வேறு வேலைகள் பார்ப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார் இருப்பினும் இவருக்கு வேறு வேலைகளே கிடைக்காத காரணத்தினால் லேப்டாப்களை திருடி விற்று அதன் மூலம் வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து பெங்களூருவில் பணியாற்றி வரும் பெண்களின் விடுதிகளில் தங்கி தொடர்ந்து அந்த விடுதிகளில் பெண்கள் பயன்படுத்தும் லேப்டாப்புகளை திருடி விற்று வந்துள்ளார்.
இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்ததால் இந்த திருட்டை தொடர்ந்த ஜெசி ஒவ்வொரு விடுதியாக சென்று ஆளில்லாத அறைகளுக்குள் நுழைந்து அங்கு சார்ஜ் போட்டு இருக்கும் லேப்டாப்புகளை திருடி வந்துள்ளார் இதனை அடுத்து இப்படி தொடர்ச்சியாக தங்கும் விடுதிகளில் லேப்டாப் திருடப்படுகிறது என காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்த புகாரை அடுத்து விசாரணை தொடங்கிய பிறகுதான் ஜெஸ்ஸியின் கைவரிசை அம்பலமாகியுள்ளது! இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இந்த திருட்டை செய்து வந்ததாகவும் எதற்காக இந்த திருட்டில் ஈடுபட்டார் என்பது குறித்தும் கூறியுள்ளார். மேலும் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 24 லேப்டாப்புகளை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.