2024 ல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு, ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அறிக்கைகள் வெளியானது. இதைத்தொடர்ந்து நாடெங்கும் தேர்தல் வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ஒரு சில கட்சிகளுடன், சில கட்சிகள் கூட்டணியும் அமைத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சாரங்கள் தீவிரமாக தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகி, அதேபோல் அனைத்திந்திய அதிமுக, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, புதிய தமிழகம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் அதிமுகவிடம் கூட்டணியில் உள்ளவர்கள் அனைவரும் புது முகமாக உள்ளனர். பின் பாஜக பக்கம் பார்த்தால் அவர்கள் தான் தற்போது பெரும் வாரியாக அதிக அளவு கூட்டணிகளை வைத்துள்ளனர். தமாகா, புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி மற்றும் தமமுக, பாமக போன்ற பல கட்சிகள் சேர்ந்துள்ளது.
மேலும் நடிகர் சரத்குமார் அவரது கட்சியில் உள்ள அனைத்தையும் சேர்த்து மொத்தமாக பாஜகவில் இணைவதாகவும் கூறி இருந்தார். இதில் பல கட்சிகளின் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. 2019 ம் ஆண்டிலிருந்து தமிழக களமே தற்போது சுத்தமாக மாறி இருப்பதை பார்க்க முடிகிறது. அதிமுக கட்சியும் பாஜக கட்சியும் தான் முன்பு கூட்டணியில் சேர்ந்து இருந்தது. ஆனால் அதன் பின் ஏற்பட்ட ஒரு சச்சரவில் அதிமுக இனிமேல் நாங்கள் பாஜக கட்சியில் இல்லை என்று கூறி இருந்தது. இருப்பினும் பாஜக தனித்து நின்று தற்போது நிறைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் அதற்கு ஈடாக திமுகவால் பெரிய அளவில் நிற்க முடியவில்லை. திமுகவின் களம் என்று பார்த்தால் தேசிய அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்களுக்கு தேசிய அளவிலும் சரி தமிழகத்தின் அளவிலும் சரி பெரும் பின்னடைவான சூழ்நிலையே உள்ளது.
இந்த நிலையில் பாஜக தான் மீண்டும் வெற்றி பெறும் என்றும், மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் தான் வருவார்கள் என்றும் தற்போது பேச்சுக்கள் உலா வருகிறது. மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பிலும் முடிவுகளும் வெளியானது. அந்த அளவிற்கு பாஜகவிற்கு பெரிய அளவில் மக்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இந்த நிலையில் எங்கள் ஊரில் எப்போதுமே இந்த ஒரு கட்சி தான் டாப் என்று பாஜகவிற்கு சாதகமான ஒரு கட்சியினை கூறி youtube மற்றும் instagram-யில் பிரபலமாக உள்ள ஒருவர் கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது.அதாவது சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்த instagram மற்றும் youtube போன்ற இணையதளங்களில் தன் முயற்சியினால் பல காமெடி வீடியோக்களை பதிவிட்டு பெருமளவில் ரசிகர்களை பெற்று வந்தவர் தான் இந்த ப்ரியங்கா மஸ்தானி!! சமீபத்தில் கூட இவர் ஒரு பாடி பில்டராக மாறி உள்ளது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
மேலும் அந்த பாடி பில்டர் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் வென்றதாகவும் அதனை பலரும் அவரை புகழ்ந்து தள்ளினர்! இந்த நிலையில் சமீபத்தில் மங்கை என்னும் தொலைக்காட்சியில் இன்டர்வியூ கொடுத்துள்ளார். அதில் எங்கள் ஊரில் எப்போதும் பாமகவிற்கு தான் ஆதரவு என்று கூறியுள்ளார்.இப்படி பாமக பற்றி ஒரு youtube பிரபலம் கூறி இருப்பது பாமகவினை ஆதரிக்கும் செயலாகும். மேலும் பாமக தற்போது பாஜகவின் கூட்டணியில் இருப்பதால் பாஜகவிற்கு பாமக நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும் என்பதும் புலனாகிறது. மேலும் இவர் எங்க ஊர்ல பாமக தன் ஆதரவு என்று கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டுள்ளது.