Tamilnadu

ஜோதிமணியை வெளுத்து எடுத்த எழுத்தாளர் வட்ட செயலாளர் போல பேசக்கூடாது!

jothimani
jothimani

பிரதமரின் பஞ்சாப் பயணம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் அவரது பயணத்தின் பாதுகாப்பு குறைபாடு இந்திய அளவில் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த சூழலில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து பேசாமல் நியாயபடுத்தி பேசிய ஜோதாமணிக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- ராஜிவ்காந்தி தவறுதலான குண்டுவெடித்து செத்தார் என சொல்லும் தமிழ் தேசிய கும்பலுக்கும், இந்திரா காந்தி உட்கட்சி பூசலால்தான் கொல்லபட்டார் என சொன்ன சீக்கிய அமைப்புகளுக்கும் இப்பொழுது பஞ்சாபில் கூட்டம் வராததால் மோடி நாடகமாடுகின்றார் என சொல்லும் காங்கிரசாருக்கும் ஒரு வித்தியாசமுமில்லை.


இரு பிரதமர்களை தேசவிரோத‌ தீவிரவாதத்துக்கும் ஒரு பிரதமரை அந்நிய சதிக்கும் பலிகொடுத்த அந்த இயக்கம் மோடி எதிர்ப்பு எனும் ஒரே நோக்கத்தில் தீவிரவாத இயக்கமாக மாறிவிட்டதோ எனும் அச்சமே மேலோங்குகின்றது, காங்கிரசார் ஒரு இந்தியராக தங்களை உணரட்டும், சீக்கிய பிரிவினைவாதமே இந்திரா உயிரை குடித்தது இன்று அரசியலுக்காக அதை காங்கிரஸ் வளர்த்தால் அது நாளை அவர்களுக்கும் சிக்கலாகும்.

இது புரியாமல் பஞ்சாப் விவசாயிகள் எழுச்சி, புழுச்சி என பேசி கொண்டிருப்பது சரியல்ல‌, பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றபட்டதில் அங்கு மோடிக்கு வரவேற்புதான் இருந்தது அம்ரீந்தர் சிங்கும் அகாலிதளமும் அவருக்கு வரவேற்பு கொடுக்கத்தான் செய்தார்கள் அந்த படம் ஏற்பாடுகள் செய்யபடும் பொழுது எடுக்கபட்டிருக்கலாம், காங்கிரசார் அதுவும் தமிழக காங்கிரசார் தங்களை இந்தியர்களாக உணரட்டும், அவர்கள் திமுக எனும் மாநில கட்சியின் உறுப்பினர்களின் சிந்தனையில் பேசிகொண்டிருப்பது சரியானதல்ல‌.

இதே தமிழகத்தில் இந்திரா அன்று ரத்தம் வழிய அடிபட்டு டெல்லி திரும்பியதெல்லாம் இங்கு நடந்த காட்சிகள், ராஜிவ் கொலையில் திமுகவினர் பலர் வரை சந்தேகிக்கபட்டதெல்லாம் வரலாறு. இந்திரா தாக்கபட்டபொழுது இது தமிழரின் எழுச்சி என திமுக மேலிடம் சொன்னது, அதை இப்பொழுதைய காங்கிரசார் மனமகிழ்ச்சியுடன் ஏற்று கொள்கின்றார்கள் போலிருக்கின்றது அன்றைய கொடும்  காட்சி போல இன்று பஞ்சாபில் அரங்கேறினால் அது எழுச்சி என இவர்கள் சொன்னால் இவர்களுக்கு ஏன் தேசிய கட்சி? திமுகவினரிலோ நாம் தமிழரிலோ இவர்கள் இருந்தால் போதாதா எனும் சந்தேகம் மேலோங்குகின்றது.

காலங்கள் மாறலாம் வரலாறு மாறாது, வரலாற்றை படித்துவிட்டு காங்கிரசார் தங்களை யார் என உணர்ந்துவிட்டு பேசட்டும், காங்கிரஸ் ஜோதிமணி சென்னிமலை அவர்கள் நடந்த குழப்பத்துக்கும் பெரும் அச்சுறுத்தலுக்கும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு எப்படி பொறுப்பெற்க முடியும் என சீறுகின்றார்? பசுவதை தடை கோரிய சாதுக்களை இந்திரா அரசு கொடூரமாக அடித்து விரட்டியது ஏன்? இந்து எழுச்சி என ஏன் அங்கீகரிக்கவில்லை?அப்படியானால் இந்திரா தாக்கபட்டபொழுது ஏன் 1979ல் எம்ஜி ராம்சந்திரன் அரசை காங்கிரசார் வசைபாடியது  ஏன்? பத்மநாபா கொலைக்கு கருணாநிதி அரசை ஏன் காங்கிரஸ் ஆதரவு அரசு டிஸ்மிஸ் செய்தது?

ராஜிவ் கொலைக்கு கருணாநிதி என்ன செய்வார் என நியாயம் பேசாமல் ஏன் திமுகவினர் வீட்டையெல்லாம் காங்கிரசார் அடித்து நொறுக்கினார்கள்? ஜெயின் கமிஷன் வர்மா கமிஷனெல்லாம் ஏன் அமைக்கபட்டன? ஜெயின் கமிஷன் முடிவினை ஏன் காங்கிரசார் வெளியிட்டனர்? புலிகள் செய்த கொலைக்கு திமுக எப்படி எப்படி குற்றம்சாட்டபடலாம் என அதனை கிழித்தெறியவில்லையே என்?அன்றொரு நியாய இன்றொரு நியாயம் என்பதெல்லாம் தேசிய கட்சிக்கு அழகல்ல, ஜோதிமணி அரசியல் எனும் பெயரில் தேசிய உணர்வினை கொலை செய்து கொண்டிருக்கின்றார்

இதே சீக்கிய எழுச்சியினை இந்திரா ஏனம்மா ராணுவத்தை கொண்டு ஒடுக்கினார்? அதுவும் பொற்கோவில் அழிய அழிய நொறுக்கினார் இது சீக்கிய எழுச்சி என ஏன் இந்திரா ஒப்புகொள்ளவில்லை? ஜோதிமணி அம்மையார் வரலாறு தெரிந்து பேசுவது நல்லது, திமுகவின் வட்ட செயலாளர் போல வக்கலாத்து வாங்குவது நிச்சயம் சரியல்ல அது பஞ்சாபில் நடந்தது சீக்கிய எழுச்சி என்றால் ஈழத்தில் நடந்தது தமிழர் எழுச்சி அல்லவா? அதை ஏன் ராஜிவ், சோனியா என எல்லோரும் பல்லாயிரம் தமிழரை கொன்று ஒடுக்கினார்கள்? இந்த கேள்விக்கு பதில் உண்டா ஜோதிமணி அவர்களே? சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.