
இயக்குனர் சுந்தர்.சி அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் ஒரு படம் எடுத்தவன் எல்லாம் ஓவரா பேசுறான் அடேய் இயக்குனர் பாலசந்தர், பாரதி ராஜா போன்றவர்களை பாருங்கள் என சுந்தர் சி பேசியிருக்கும் நிலையில் அவர் யார் குறித்து அவ்வாறு பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இருவரையும் இயக்கிய இயக்குனர்களில் சுந்தர் சி முக்கியமானவர் அவர் பேட்டி ஒன்றில் பேசுகையில் தமிழ் சினிமாவில் ஒரு படம் எடுத்தவன் எல்லாம் ஓவரா பேசுறான் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்குறான் மற்றவர்களை பார்த்து கற்று கொள்ளுங்கள் நான் எல்லாம் என்னுடைய படம் எடுக்கிறேன் அது பற்றி பேசுவேன்.
படம் ஓடினால் போதும் என இருப்பவன் என பேசி இருக்கிறார் இந்த சூழலில் சுந்தர்.சி பேசியது இயக்குனர் ரஞ்சித்தை குறிவைத்து தான் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளது, ரஜினியை வைத்து படம் இயக்கிய பின்பே ரஞ்சித்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது எனவும் ஆனால் தன்னை பெரிய இயக்குனர் போன்று ரஞ்சித் பில்டப் செய்வதும் அதனை பேசுவதும் திரை துறையில் பலரை முகம் சுழிக்க செய்வதாக கூறப்படுகிறது.
பல இயக்குனர்கள் இது குறித்து வெளிப்படையாக பேசியும் இருக்கின்றனர், எப்படியெல்லாம் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை ஒரு சில இயக்குனர்கள் அமுக்கிவிட்டான் பிதுக்கிவிட்டான் என்று கூறியே அகல பாத்தளத்திற்கு கொண்டு சென்று விட்டதாக கூறுகின்றனர் திரை துறையை சேர்ந்த சிலர்.
சுந்தர் சி பேசியது ரஞ்சித்தை குறிவைத்தா அல்லது வேறு யாரையுமா என அவர் வெளிப்படையாக கூறாத வரை இது போன்ற விமர்சனங்களும் யுகங்களும் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை, சுந்தர் சி பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.