தமிழகத்தின் தலைநகரான சென்னை கடும் மழையால் பாதிப்பை சந்தித்து அடுத்த வாரத்திலேயே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கன மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள திருநெல்வேலி தூத்துக்குடி திருச்செந்தூர் பகுதிகளில் முப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது இருப்பினும் உணவு தண்ணீர் பால் என அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் சென்னை மக்கள் பரிதவித்தது போன்று தென் மாவட்ட மழை வெள்ளத்திலும் பல பகுதி மக்கள் பாதிக்க பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஆறு ஏரியில் உள்ளது அதுவும் நிரம்பி வழிந்து சில ஏரிகள் கரை உடைந்து அதன் வெள்ளப்பெருக்கமும் பெரும்பாலான மக்களை பாதித்தது.
இன்னும் சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கிடைக்காமல் இருந்ததால் அரசு நிவாரண பொருட்களுக்காக காத்திருக்காமல் சில கடை, நிறுவனங்கள் தாமாக முன்வந்து மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இதனிடையே ஒரு சில பகுதிகளில் நிவாரண பொருட்கள் வரவில்லை ஆனால் அமைச்சர்கள் மட்டும் ஆய்வு செய்ய வருகிறார்கள்! இன்றும் மழை வெள்ளப்பெருக்கு இல்லாத பகுதிகளுக்கு மட்டுமே சில அமைச்சர்கள் ஆய்வு செய்து திரும்புகிறார்கள் ஊருக்குள் வராமல் செல்கிறார்கள் என்றும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் மின்சாரமும் தொலைதொடர்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது தென் மாவட்டங்களில் தற்போது சிறிது சிறிதாக இயல்புநிலை திரும்பி வருவதால் மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஒவ்வொன்றும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் மழைநீர் தேங்காத பகுதியில் மட்டும் ஆய்வு செய்து விட்டு திரும்பும் திமுக அமைச்சர்களின் கார்களை சில பகுதி மக்கள் வழி மறைத்து ஊருக்குள் வந்து பாருங்கள் இந்த பகுதிக்கு வாருங்கள் என்று அழைத்தும் அவர்கள் வராமல் திரும்பிச் செல்லும் காட்சிகள் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பொழுது அவர் உடன் இயக்குனர் மாரி செல்வராஜும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது கவனத்தை பெற்றது. அதுமட்டுமின்றி மழையில் பாதிக்கப்பட்ட மக்களின் குறித்த தகவல்கள் அடங்கிய பதிவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்திருந்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக உதயநிதி சென்ற பொழுது அவர் உடன் மாரி செல்வராஜ் சென்றது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் ஏன் உதயநிதயுடன் செல்ல வேண்டும்? அவருக்கு என்ன தொடர்பு? ஏன்? அவர் சினிமா இயக்குனர் தானே அவரே அமைச்சரும் சொல்ல வேண்டும் என்ற பல கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
அதனால் இது குறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்ட பொழுது உதயநிதி செய்த செயலின் பின்னணியை அம்பலப்படுத்தினார்கள், அதாவது ஏற்கனவே சென்னை வெள்ளத்தில் அதிருப்திகளையும் பின்னடைவுகளையும் மக்களிடம் அவப்பெயர்களையும் திமுக சந்தித்துள்ளது, அதனால் தூத்துக்குடி வெள்ள பாதிப்பிலும் கெட்ட பெயரையும் அதிருப்தியும் சந்தித்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதற்காகவே அமைச்சர் உதயநிதி மாரி செல்வராஜ் அவர்களை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார் எனவும், இதனால் தற்போது பேசுபொருளாக மாரி செல்வராஜ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார், உதயநிதி பெரிய அளவில் பேசப்படவில்லை எனவும் கூறினார்கள். இந்த விமர்சனங்கள் வேறு படு வைரல் ஆகிறது. மேலும் மாரி செல்வராஜ் குறித்து வடிவேல் பேசியதன் பின்னணியும் மடை மாற்றும் வேலைதான் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.