24 special

டைம் ஓவர் முடிச்சுவிடவேண்டியதுதான்...! டெல்லி முடிவால் நடுக்கத்தில் அறிவாலயம்...!

Mkstalin
Mkstalin

2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கு பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மூலம் மக்களின் குறைகளை கேட்டறிந்து பாஜகவிற்கு ஆதரவு திரட்டி வருகிறார்  . எதிர் கட்சிகள் இந்தியா என்ற பெயரில் ஒருங்கிணைந்து மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் மற்றும் விலைகளின் உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு பாஜகவை எதிர்ப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. 


இந்த நிலையில் திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையின் சோதனையின் பிடியில்  சிக்கிய நிலையில்  திமுக சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கியது . இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவிற்கு எதிராக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் நாடாளுமன்றத்தில்  எதிர்கட்சியினர் மற்றும் ஆளும் கட்சியினர் இடையில் விவாதங்கள் காரசாரமாக இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன் வைத்ததுடன் சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்ததால் பிரதம மந்திரி மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சிணரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்குத்தக்க பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசியபோது பாஜக இதற்கு முன்பு வெற்றி பெற்றதை விட வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற காத்திருக்கிறது என்றும் இது மட்டுமல்லாமல் பாஜக இதற்கு முன்பு வெற்றி பெறாத இடங்களில் எல்லாம் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள போகிறது என்று சூட்சகமாக கூறியவுடன் எதிர் கட்சிகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி ஆகியோர் திமுகவை குறிவைத்து  பேசினார்.ஸ்மிருதி ராணி பேசும்போது ஊழலை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சி தான் என்றும் ஊழலை பற்றி பேசினால் அதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குவது எதிர்கட்சிகள் கூட்டணியில் இருக்கும் திமுக கட்சி தான் என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை ஒதுக்கிய கட்சி திமுக என்றும்  முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்து பெண்ணை அவமானப்படுத்துவதற்கு உதாரணமாக விளங்கிய கட்சி திமுக கட்சி தான் என்றும் கூறியதோடு கனிமொழிக்கு பதிலடி தரும் விதமாக நாங்கள் திராவிடர்கள் அல்ல தமிழர்கள் என்றும் செங்கோலை பற்றி கேள்வி எழுப்பியதற்கு  சிலப்பதிகாரம் காட்டும் வழியில் தான் பாரத பிரதமர் மோடி இந்திய நாட்டை வழிநடத்தி செல்கிறார் என்று கனிமொழி எழுதிய கேள்விக்கு தரமான பதிலை வழங்கினார்.

இவ்வாறு தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அனைவரும் எதிர்க்கட்சிகளை தாக்கி பேசியதோடு திமுகவை தான் அதிகமாக குறி வைத்துள்ளார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன.இவ்வாறு தொடர்ந்து டெல்லி மேலிடம் திமுகவை அடிக்க ஆரம்பித்து விட்டதால் திமுக அறிவாலய வட்டாரங்கள் அதிர்ச்சியில் உள்ளன ஒருபுறம் அமலாக்கத்துறை ரெய்டு மற்றும் மறுபுறம் டெல்லியில் திமுகவை அடிக்க ஆரம்பித்து விட்ட தேசிய தலைவர்களால் திமுக திக்குமுக்காடி வருகிறது மேலும் இப்படியே நடந்துவருவதால் நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக தாக்கு பிடிப்பது சிரமம் என எண்ணி திமுக தலைமையில் பல ஆலோசனை கூட்டங்கள் நடந்துவருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன...!