24 special

அண்ணாமலை வெளியிட்ட வீடியோ மீது பழியை போட்டு ...! தப்பிக்க முயற்சித்த செந்தில் பாலாஜி

Annamalai,senthil balaji
Annamalai,senthil balaji

கடைசி நேரம் வரை விடாமல் துரத்திய செய்தியாளர் இந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு அடுகடுக்கான சம்பவங்கள் அரங்கேறி இருக்கும் சூழலில் நேற்றைய தினம் செந்தில் பாலாஜி மற்றும் நிருபருக்கு இடையே நடந்த விவாதம் தற்போது கோட்டை வரை எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.


அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வந்த மறு நொடியே செய்தியாளர்கள் டாஸ்மார்க்கில் வசூல் செய்யப்படும் கூடுதல் தொகை குறித்து கேள்வி எழுப்ப தயாராக இருந்தனர், இந்த தகவல் அமைச்சருக்கும் செல்ல செய்தியாளர் சந்திப்பிற்கு வந்த அமைச்சர் நேரடியாக அண்ணாமலை பெயரை குறிப்பிடாமல் ஒருவர் வீடியோ வெளியிட்டு 15 நாட்கள் கழித்து கேள்வி கேளுங்கள் என்கிறார் ஊடகங்கள் உங்களுக்கு குறைந்தப்பட்ட அறிவு இல்லை என அவர் நினைக்கிறாரா? என செந்தில் பாலாஜி மலுப்பலாக கேள்வி கேட்டார்.

ஆனால் திடீர் என நிருபர் ஒருவர் சார் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குகிறார்கள் உண்மையா இல்லையா? என சொல்ல அமைச்சரும் பதிலுக்கு எந்த கடை என சொல்லுங்கள் பொத்தாம் பொதுவாக கூற கூடாது என சொல்ல உடனே நிருபறும் என்னுடன் வாருங்கள் நான் காட்டுகிறேன் என ஒரே போடாக போட்டார்.

இந்த பதிலை அமைச்சர் எதிர்பாரத நிலையில் நிருபர்கள் மற்றும் அமைச்சர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. எதற்கெடுத்தாலும் பாஜக மீது பழியை போட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்வது போன்று செந்தில் பாலாஜியும் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ மீது பழியை போட்டு தப்பிக்க நினைத்த நிலையில் விடா பிடியாக கேள்வியில் குறியாக நின்ற நிருபரின் செயல்பாடும் ஊடகத்தின் கேள்வியும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.