மத்தியில் 2014 மற்றும் 19 ஆகிய இரு தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றியை பெற்று ஆட்சியை அமைத்து பத்து ஆண்டுகளாக தனது ஆட்சி அதிகாரத்தை தன் வசம் வைத்து வந்தது. இதனால் நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் திட்டமிட்டு ஒன்றிணைந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஒன்று திரண்டு ஒரு கூட்டத்தை நடத்தியது அதன் முதல் கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பீகாரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தலைமையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமை ஏற்று இருந்தார் 16 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இரண்டாவது கூட்டத்தில் கூட்டணியின் பெயராக இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது கூட்டங்களில் வாதங்களை மிஞ்சியதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தின் சார்பாக திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இண்டி கூட்டணியில் ஒரு அங்கமாகவும் சேர்ந்தனர்.
ஆனால் அப்பொழுது நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையாக மூன்று இடங்களில் வென்றது. இது இண்டி கூட்டணியிலேயே விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. பிறகு இந்த கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த பீகார் முழ்தல்வர் நிதிஷ்குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தார் மேலும் இண்டி கூட்டணிக்குள்ளே ஒற்றுமையில்லை ஒரு தெளிவு இல்லை என அவர் கூறியிருந்தார். அதே சமயத்தில் தமிழகத்தில் திமுகவின் நிலைமையானது மிகவும் மோசமாகவே பார்க்கப்பட்டது பல இடங்களில் திமுக அரசியல் எதிராக போராட்டங்களும் வெடித்தது மேலும் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 2024 லோக்சபா தேர்தலுக்காக திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் திணறி வந்ததை அரசியல் விமர்சகர்கள் பலர் கேள்விகளாக முன்வைத்தனர்.
ஏனென்றால் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் தோற்றுவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது அவர்களுக்காக குரல் கொடுக்கிறதா என்று பார்த்தால் யோசிக்க வேண்டிய விஷயமாக தான் உள்ளது... அதற்கு காரணம், வேங்கை வயல் சம்பவம் தான்!! இதுவரை இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை விசிகவின் கூட்டணி தான் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது என்றாலும் அவர்களால் இன்னும் அந்த குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது இதனால் விசிக பாஜக அதிமுக கூட்டணி விலகிய உடனே அதிமுகவுடன் இணைவார் என பல பேச்சுக்கள் உலா வந்தது, பல அரசியல் விமர்சகர்களின் கருத்து தெரிவித்தனர். ஆனால் திமுக தலைவரான மு க ஸ்டாலின் எதை முன்வைத்து திருமாவளவனை மடக்கினார் என்பது தெரியவில்லை ஆனால் லோக்சபா தேர்தலிலும் விசிக திமுகவின் கூட்டணியிலே தொடர்ந்தது. அதோடு மூன்றுக்கும் மேற்பட்ட சீட்டுகளை இந்த முறை பெறுவோம் என கூறிவந்து திருமாவளவனுக்கு இரண்டு சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. மேலும் கர்நாடகா தேர்தலின் பொழுது காங்கிரஸ்காக பிரச்சாரத்தை மேற்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அந்த தேர்தலிலும் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை.
இப்படி விசிக தொடர்ச்சியாக அவமானப்படும் சூழ்நிலையில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் பாஜக தனது ஆட்சியை தக்க வைத்து இண்டி கூட்டணியை தோல்வியடைய செய்துள்ளது. இதனை அடுத்து இண்டி கூட்டணியில் கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பொழுது விசிகவின் தலைவரான திருமாவளவன் அங்கு சென்று உள்ளார். அப்பொழுது வரிசையில் நிற்கும் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அதில் திருமாவளவனின் கையைப் பிடித்து இடதுபுறம் நகர்ந்து இருக்க வைக்க அவர் படிப்படியாக கடைசிக்கு சென்று விட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதனால் விசிகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் திருமாவளவனிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.