Cinema

விஷாலின் அரசியல் பயணத்திற்கு... அப்பா சொன்ன அட்வைஸ்!

Vishal, GK reddy
Vishal, GK reddy

தமிழ் சினிமாவில் அர்ஜுன் உடன் இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால் அர்ஜுன் சொன்னதை கேட்டு செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விஷால் சினிமாவில் புரட்சித்தளபதி என்ற பெயர் பெற்றவர். படப்பிடிப்பிலும், நிகழ்ச்சிகளிலும் பார்ப்பரப்பாக காணப்படுவார். இவர் சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு நல திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில் அரசியலில் குதிப்பதாக சில தகவல்கள் வந்தன அதற்கு விஷாலின் தந்தை பேசியது விஷாலுக்கு மாறாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றனர்.


சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் விஷாலின் நண்பர்கள் என பலரும் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் தனது பயணத்தை ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனால், விஷால் மட்டும் நடிங்கர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் கல்யாணம் என்ற சபதத்தில் வாழ்ந்து வருகிறார். விஷால் மீது நடிகைகள் சிலர் பேசியது கூட விஷாலுக்கு கல்யாணம் நடக்கப்போகிறது என சில பேச்சுக்கள் எழுந்தது. அது விஷாலுக்கு அவமதிக்கும் விதமாக இருந்தாக சிலர் பேசினர். விஷால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனக்கென்று ஒரு பாதையில் படங்களை நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் ரத்தினம் என்ற படத்தில் நடித்து வரும் அவர், விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பு வந்ததும் விஷாலும் தனது ரசிகர் சங்கம் மூலம் கட்சியாக மாற்றப்போகிறார் என தகவலும் வந்தது.

இந்நிலையில், நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை படித்த பலரும் விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கணித்திருக்கின்றனர். விஷால் தனது ரசிகர் மன்றத்தை மக்களுக்கு பணி, சேவை ஆற்றும் ஒரு சமூக பொறுப்புள்ள ரசிகர்களாகத்தான் விஷால் இன்றுவரை அவர்களை பயன்படுத்தி வருகிறாராம். அந்த அறிக்கையில் 'எதிர்காலத்தில் இயற்கை வேறு முடிவு வைத்திருந்தால் மக்கள் பணி ஆற்ற தயாராக இருக்கிறேன்' என்று கூறினார். அதனால் அவருக்கு அரசியலில் பயணிக்கும் ஆசை இருப்பதாக கூறுகின்றனர். விஷால் கூடிய விரைவில் அரசியலில் கால் பதிப்பார் விஜயை போல சட்டமன்ற தேர்தலில் சந்திப்பார் என பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி இதுகுறித்து கூறுகையில், "விஷால் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். விஜய், அஜித், சூர்யா மாதிரி நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டு பிறகு அரசியலுக்கு வந்தால் நல்லது" என்றார். இதற்கு நெட்டிசன்கள் முதலில் திருமணத்தை முடியுங்கள் சார் பிறகு அரசியலில் வரலாம் என விஷாலின் அப்பாவின் அட்வைஸை கொடுத்து வருகின்றனர்.  உங்களது நடிகர் சங்க கட்டிட்டம் நீங்கள் இல்லை என்றாலும் வளர்ந்து வரும் நடிகர்கள் அதனையே பொறுப்பெடுத்து கொள்ளவர்கள் மற்றும் நடிகர் சங்க தலைவர்கள் பொறுப்பேற்பார்கள் என விஷாலுக்கு அட்வைஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.