தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்த்து பேசியது தான் தற்போது பரபரப்பாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் மேலும் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டின் தலைப்பு மிகவும் நன்றாக இருக்கிறது என்றும் தன்னை பெரிதும் ஈர்க்கிறது என்ற வகையில் கூறினார் மேலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று தலைப்பு இல்லாமல் சனாதனத்தை ஒழிப்போம் என்று இருந்ததற்கு சில விஷயங்களை எதிர்க்கக் கூடாது ஒழித்தே ஆக வேண்டும் என்று பேசியது சனாதனத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சனாதன தர்மத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசும்போது டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்களை எப்படி ஒழித்து விரட்டுவோமோ அதே போல் தான் சனாதனத்தை இந்திய நாட்டில் இருந்து நீக்க கட்ட வேண்டும் என்று சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார் என உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் சனாதனத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் சனாதன கொள்கை என்பது இந்து மதத்தோடு தொடர்புடையது என்பதால் இந்துத்துவத்தை அவமதித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது மக்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுஇவ்வாறு உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியது தான் தற்போது அனைத்து அரசியல் தலைவர்கள் மத்தியிலும் விமர்சனங்களாக எழுந்துள்ள நிலையில் தேவை இல்லாமல் இடதுசாரிகள் வேறு உதயநிதி ஸ்டாலினை பேசவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அனைத்து நியூஸ் சேனல்களிலும் கூட தலைப்புச் செய்தியாக உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசிய கருத்துதான் உலா வருகிறது மேலும் பல அரசியல் தலைவர்களும் உதயநிதி ஸ்டாலின் பேசியதை தற்போது விமர்சனம் செய்து வருகின்றனர் அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய கருத்து கூறியுள்ளார்.சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சமூகவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட சிறப்புரையாற்றிவிட்டு நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன கருத்துக்கு தனது பதிவை தெரிவித்தார் மேலும் தொடர்ந்து பேசியவர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உதயநிதி பேசியது உள்துறை அமைச்சர் விமர்சனம் செய்வது வரை பரவியது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் உதயநிதி பேசும்போது அதே மேடையில் இருந்து வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது உதயநிதி பேசியது உள்துறை அமைச்சர் வரை சென்றது அதிர்ச்சி அளிக்கிறது என தப்பிக்கும் விதமாக கூறியது வேறு திருமாவளவன் எஸ்கேப்பாக பார்க்கிறார் என்ற தோரணையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் திமுக விற்கும் இடையே சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வாறு உதயநிதி பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் வடக்கே ஒரு சாமியார் கூட உதயநிதி தலைக்கு பத்து கோடி ரூபாய் அறிவித்துள்ளார் சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று திருமாவளவன் பல்டி அடித்து தற்போது உதயநிதியை வம்பில் மாட்டி விட்டுள்ளார் என்றும் உதயநிதி சனாதனத்தை நேரடியாக எதிர்க்கிறேன் என்றார் ஆனால் திருமாவளவன் சனாதனம் என்பது அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடியது என சமாளிக்கும் விதமாக பேசி உள்ளார் என்றும் விமர்னங்களை கிளப்பியுள்ளது. இப்படி திருமாவளவன் பேசியது தற்போது திமுக வினர் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது