24 special

சத்தம் இல்லாமல் உதயநிதியை கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் இடதுசாரிகள்...!

Udhayanidhi, pmmodi
Udhayanidhi, pmmodi

சனாதன தர்மத்தை பற்றி உதயநிதி பேசியது தற்போது பாஜகவில் உள்ள மூத்த தலைவர்கள் மற்றும் பாஜகவில் உள்ள நிர்வாகிகளை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தேனாம்பேட்டையில் சனாதன ஒழிப்பு என்ற தலைப்பில் காமராஜர் அரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சனாதன தர்மத்தை இந்திய நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக வைத்து பேசியதால் தற்போது பாஜகவினர் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதன எதிர்ப்பு என்று தலைப்பு போட்டு இருப்பதற்கு பதிலாக  சனாதன ஒழிப்பு என்று போட்டிருப்பது தன்னை மிகவும் ஈர்ப்பதாக இருக்கிறது என்று கூறியதுடன் டெங்கு மலேரியா முதலிய நோய்களை நாம்  எதிர்க்க கூடாது அவற்றை நாம் ஒழிக்க வேண்டும் என்று கூறினார் மேலும் டெங்கு மற்றும் மலேரியா காய்ச்சலை உருவாக்குகின்ற கொசுக்களை நாம் எப்படி ஒழித்துக் கட்டுவோமோ அதுபோலவே இந்திய நாட்டிலிருந்து இந்து சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார் மேலும் உதயநிதி பேசியது தற்போது அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியாகும் நிலையில்  பாஜகவினர்இதற்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

உதயநிதியின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர்  மால்வியா உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை மலேரியா மட்டும் டெங்கு ஆகியவற்றுடன் இணைத்து பேசியதோடு சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்கள் இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று தான் அழைப்பு விடுத்திருக்கிறார் மேலும் மும்பை கூட்டணியில் இந்த தீர்மானம் தான் நிறைவேற்றப்பட்டதா என்று சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார். 

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் நான் ஒருபோதும் சனாதனத்தை பின்பற்றுபவர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கவில்லை சனாதனம் என்பது மக்களிடையே பிரிவை ஏற்படுத்தும் ஒன்றாக பார்ப்பதால் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் கூறினேன் என்று தெரிவித்ததோடு இதன் மூலம் வரும் சவால்களை நான் எதிர்க்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

மேலும் இதன் அரசியல் பின்னணி பற்றி சில அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக வேல் எடுத்து பிரச்சாரம் செய்தது எங்கே இந்த முறையும் அதே போல் செய்து விடுமோ என்ற பயத்தில் இடதுசாரிகள் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தி விட வேண்டும் என்றுமுடிவெடுத்து அதற்காக உதயநிதியை வரவழைத்து இதுபோல் பேச வைத்து விட்டதாக கூறுகின்றனர். 

மேலும் உதயநிதி இவ்வாறு பேசியது இடது சாரிகளுக்கு தீமையை தராது மேலும் அது திமுகவிற்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் தேவையில்லாமல் இடதுசாரிகள் உதயநிதியை இந்த விஷயத்தில் கோர்த்துவிட்டனர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், அது மட்டுமில்லாமல் கருணாநிதி, அவரது அப்பா ஸ்டாலின் கூட இப்படி சனாதனத்தை ஒழிப்பேன் என இதுவரை கூறவில்லை காரணம் அவர்களுக்கு தெரியும், ஆனால் உதயநிதிக்கு அரசியல் அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரை வைத்து இடதுசாரிகள் தங்கள் கருத்தை தெரிவித்துவிட்டார்கள். இனிதான் உதயநிதி நிஜ அரசியலை பார்க்கப்போகிறார்' எனவும் கூறினார்கள் சில அரசியல் விமர்சகர்கள்...!