24 special

ரெய்டில் சிக்கிய ஆதாரம்..! திமுகவில் செந்தில் பாலாஜிக்கு பதவி பறிபோகுமா

Senthil balaji, mk stalin
Senthil balaji, mk stalin

கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் தற்போதைய மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடிகள் ஈடுபட்டது அம்பலமாகி அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் பிறகு திமுகவில் சேர்ந்தார்! தற்போது அமைச்சராக இருக்கிறார்!. அந்த பண மோசடி வழக்கு பற்றிய விசாரணையும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பல்வேறு தரப்பிடமிருந்து புகார்கள் எடுத்து வைக்கப்பட்டது.


ஏன் தேசிய அளவில் செந்தில்பாலாஜி பேசும் பொருளாக மாறும் அளவிற்கு பத்து ரூபாய் பாலாஜி என்ற ஹாஸ்டக் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதிலிருந்து வெளிவருவதற்கு என்னவெல்லாம் கூறி சமாளிக்கலாம் என்று செந்தில் பாலாஜி யோசித்துக் கொண்டிருக்கிற வேளையில் திடீரென கடந்த வியாழக்கிழமை அன்று அதிகாலையில் ஐ டி அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட உறவினர் நண்பர்கள் ஒப்பந்ததாரர்கள் போன்றோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் சோதனைகளை மேற்கொண்டனர். 

மூன்று நாளாக இந்த வருமானவரித்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், சோதனையில் ஈடுபட விடாமல் அதிகாரிகளிடத்தில் அத்துமீறிய விவகாரம் குறிப்பாக பெண் அதிகாரியான காயத்ரியிடம் அத்து மீறியதால் வருமானவரித்துறையினர் மற்றும் மத்திய அரசின் பிடி அமைச்சர் செந்தில் பாலாஜி மீது இருகியது

இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் புகார் அளித்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே மத்திய அரசு சிஐஎஸ் எப் வீரர்களை ஐ டி அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக அனுப்பி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிகாரிகளை தாக்கி அவர்கள் சோதனையில் கைப்பற்றியவற்றை பறிக்க வேண்டும் மற்றும் அதிகாரிகளை தாக்க உத்தரவிட்ட ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கரூர் கிருஷ்ணாபுரத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனை மேற்கொள்ள சென்ற அதிகாரிகளை அங்கு கூடியிருந்த கும்பல் தாக்கியது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

இதனால் பாதுகாப்பு கூறிய வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை வரவழைத்து பாதுகாப்பு கொடுத்தனர். அதே நேரத்தில் ராயனூர் கொங்கு மெஸ் மணி வீட்டில்  சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர், அவர்களையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார்.

இப்படி அதிகாரிகள் மறுபடியும் மறுபடியும் தாக்கப்படுகிற வேலையில் இந்த தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்று நிரூபிக்கும் வகையில் ஆதாரம் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும் அந்த ஆடியோவில் திமுகவின் தொண்டரான கொங்கு மெஸ் சுப்ரமணி, செல்வராஜ் என்பவரிடம் கும்பலாக சென்று அதிகாரிகளை தாக்கி அவர்கள் சோதனையில் கைப்பற்றியவற்றை தங்கள் வசம் எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ ஆதாரமே தற்போது வருமானவரித்துறையினர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் என்னுடைய ஆதரவாளர்கள் என் மீது உள்ள பாசத்தில் தான் இப்படி செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆனால் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பது தற்போது உறுதியாகும் அளவிற்கு ஆதாரம் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலால் செந்தில் பாலாஜியின் மீதான பிடி மிகவும் இருகும் என்று தற்போது அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் தெரிந்த காரணத்தினால் தற்போது திமுக செந்தில் பாலாஜி இடமிருந்து சற்று விலகி இருக்கலாம் எனவும், அடுத்த அமைச்சர்கள் மாற்றத்தில் செந்தில் பாலாஜியின் பெயர் நிச்சயமாக இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.