
2024 தேர்தலை மையமாக வைத்து திமுக போட்ட திட்டத்தை திருமாவளவன் சல்லிசல்லியாக உடைந்ததால் திமுக தரப்பு கடும் கோபத்தில் இருக்கிறது.தமிழக அரசியலில் செந்தில் பாலாஜி கைது மற்றும் அவரது அறுவை சிகிச்சை எவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியதோ அதேபோன்று விஜய் சமீபத்தில் தலைமையேற்று நடத்திய பள்ளி மாணவர்களின் விழாவும் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.
முன்னதாக அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் சார்பில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றத்தில் மாலை அணிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவின் போது அது கைக்கூடவில்லை இருப்பினும் தீரன் சின்னமலையின் விழாவின் போது அது கைகூடியது. அன்றே செய்தியாளர்களை சந்தித்த விஜய் நற்பணி மன்றத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயின் அறிவுறுத்தல் படியே இந்த மாலை அணிவிக்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார் அரசியலைப் பற்றி கேள்வி எழுப்பிய போது அதனை விரைவில் விஜய் அவர்களே கூறுவார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழாவை நடிகர் விஜய் ஏற்பாடு செய்து அதனை வெற்றிகரமாகவும் நடத்தி முடித்தார். அந்த விழாவில் பல்வேறு அரசியல் கலந்த கருத்துக்களையும் அவர் கூறியதால் விரைவில் விஜய் அரசியலில் நுழைவார் என்றும் மக்கள் மத்தியில் அவரது ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை கிளப்பியது. விஜயின் அரசியல் நுழைவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்று தமிழக ஆளுங்கட்சி தரப்பினரும், எதிர்க்கட்சி தரப்பினரும் முனைப்புடன் இருப்பதாகவும் அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பல தகவல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மக்கள் மத்தியில் விஜயின் அரசியல் பிரவேசம் நடக்குமா? அதனால் நன்மை கிடைக்குமா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது விஜய்யை தனது கூட்டணி கட்சியில் இணைத்து விட வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் முந்திக்கொண்டு அறிக்கை வேறு கொடுத்தனர். காங்கிரஸ் எம்பி விஜய் வசந்தை வைத்து விஜய் அரசியலில் நுழைந்தால் நன்றாக இருக்கும் அவர் அரசியலில் நுழைவதை நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறி விஜயின் அரசியல் பிரவேசத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டது. இதன் பின்னணியில் அறிவாலயத்தின் ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய எதிர்கருத்தை கூறி காங்கிரசிற்கு பெரும் வருத்தத்தையும் அவர்களது திட்டத்தில் பெரும் கல்லை போட்டு சிதைத்து உள்ளார். மதிமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார், அப்போது 'பொது வாழ்க்கையிலுள்ளவர்கள் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் வரலாம் முதலில் அவர்கள் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் பிறகு ஆட்சியைப் பற்றிய கனவு இருக்க வேண்டும் ஆனால் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் தமிழகத்தில் உள்ள திரை உலக பிரபலங்கள் தங்களது பாப்புலாரிட்டியை வைத்து முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரை உலக பிரபலங்களின் இந்த செயல் தமிழ்நாட்டின் சாபக்கேடு! இந்தியாவில் வேறு எங்கும் இப்படி நடக்கவில்லை என்று செய்தியாளர்கள் மத்தியில் கடும் ஆவேசமாக பதில் அளித்துள்ளார் திருமாவளவன்.
விஜய்யை எப்படியாவது திமுக கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என அறிவாலயத்தரப்பு திட்டமிட்டு அதன் பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஒரே போடாக போட்டு பர்னிச்சரை உடைத்தது போன்று திமுகவின் மொத்த திட்டத்தையும் திருமாவளவன் உடைத்து விட்டது திமுக கூட்டணியை கடுப்பேற்றி உள்ளது.