24 special

கேரளா ஸ்டோரியை தொடர்ந்து தமிழக ஸ்டோரி..! பெரும் வேதனையில் தமிழக மக்கள்

Kerala story ,mk stalin
Kerala story ,mk stalin

நேரடியாக களமிரங்கிய காவல்துறை கேரளா ஸ்டோரி எனும் திரைப்படம் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அரங்கேறி இருக்கும் சம்பவம் இதுவரை தமிழகம் குறித்து திராவிட தலைவர்கள் சொல்லி வந்த அனைத்தையும் சுக்கு நூறாக நொறுக்கி இருக்கிறது.


அதிலும் குறிப்பாக இந்து பெண்ணை திருமணம் செய்த காரணத்திற்காக கிறிஸ்தவ தலைவர்கள் பாதிரியார்கள் ஆகியோர் திருமணம் செய்த கிறிஸ்தவ குடும்பத்தை ஒதுக்கி வைத்து இருப்பதுடன், இறந்த கிறிஸ்தவ தந்தையை அடக்கம் செய்யவேண்டும் என்றால் இந்து பெண்ணை திருமணம் செய்தது தவறு என கூறி ஊரில் உள்ள கிறிஸ்தவ பெரியவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உனது தந்தை உடலை புதைக்க அனுமதிப்போம் என உத்தரவு போட்டது கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இப்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது வட மாநிலத்திலோ அல்லது இந்துக்களில் இதே போன்று ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால் ஊடகங்களும் திராவிட அரசியல் கட்சிகள் தொடங்கி சமூக ஆர்வலர்கள் வரை என்ன கூறி இருப்பார்கள்.

திருமாவளவன் தொடங்கி முதல்வர் ஸ்டாலின் வரை  இந்நேரம் வீதியில் இறங்கி போராடி இருக்க மாட்டார்களா? உடனடியாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தமிழக அரசு கைது செய்யவேண்டும் என்று பொதுமக்கள் வழியிறுத்த தொடங்கி இருக்கின்றனர். இந்துக்கள் என்றால் கைது செய்வீர்கள் தவறு செய்தது கிறிஸ்தவர்கள் என்றால் காவல்துறை சமாதான பேச்சு வார்த்தை நடத்துமா என இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.

கேரளா ஸ்டோரி என்பது கேரளாவில் இருந்து இந்து பெண்கள் மதம் மாறி செல்வதை குறிக்கிறது, தேனி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகத்தில் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபரை காலில் விழ வைக்கும் நிலையில் தமிழகத்தில் சம்பவங்கள் அரங்கேறி இருப்பது தான் தமிழக ஸ்டோரி என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.