24 special

மூன்று நாட்களாக அடுத்தடுத்து நடந்த விஷயம்! உளவு துறை சொன்ன ரகசியம்! முதல்வர் ஸ்டாலின் தரப்பு கடும் ஷாக்!

mkstalin , intelligence
mkstalin , intelligence

பா.ஜ.க - அ.தி.மு.க., கூட்டணி உறுதியானதால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த கூட்டணி உருவானால், வெற்றி முழுவதுமாக பாதிக்கப்படும் என்ற பீதியில் முதல்வர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, வி.சி.க., தலைவர் திருமாவளவன், த.வெ.க., தலைவர் விஜய் உள்ளிட்டோர், கூட்டணியை விமர்சிக்கும் ஆட்டத்தை துவங்கி உள்ளனர்.இதுமேலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலு சேர்த்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பெரிதாக நம்பி இருக்கும் செயல்படுத்திய இலவச திட்டங்கள் தற்போது அவருக்கே திரும்பியுள்ளது. மேலும் இலவச பஸ் ஓசி பஸ் என திமுக அமைச்சரே கிண்டலடித்தார்.


மேலும் ஓசி  பஸ்  என கூறிய பொன்முடிக்கு பல பெண்கள், உங்க அப்பன் காசிலா நாங்கள் ஓசியில் போகிறோம்' என, சகட்டுமேனிக்கு  பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, கட்சிதலைமையின் கோபத்திற்கு ஆளான பொன்முடி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.அதே போல் அந்த இலவச பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவது இல்லை என்பதால் பெண்களிடையே அதிருப்தியை தான் கிளப்பியுள்ளது. இலவசத்தை கொடுத்துவிட்டு பால்விலை மின்சார கட்டணம்,மற்றும் சொத்து வரி அதிகரிப்பு,அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் என  மக்களை பாடாய் படுத்தி வருகிறார்கள்.. விலையேற்றம் ஒருபுறம் என்றால் போதை பொருள் புழக்கம் அதிகமாகி இளைஞர்களை சீரழித்து வருகிறது. குறிப்பாக போதை பொருள் கடத்தலில் திமுகவில் மாவட்ட பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் தான் கடத்தல் மன்னனாக செயல்பட்டான் . அடுத்து டாஸ்மாக் பிரச்சனை எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள் கொங்கு பகுதியில் புதிதாக முளைத்துள்ள மனமகிழ் மன்றங்கள் என தமிழகம் சீரழிக்கப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தினம் தோறும் நடைபெற்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் , பெண்களையும், ஹிந்து சமயங்களையும் மிகவும் ஆபாசமாக பொன்முடி பேசியுள்ளார். பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் உள் ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய போதிலும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்களால், பெண்களின் ஆதரவை தி.மு.க., இழக்கக் கூடும் என கூறப்படுகிறது பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடை யாமல் இருக்க, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்குவதுதான் ஒரே வழி என, ஆட்சியாளர்களுக்கு உள வுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

தி.மு.க.வின் அக்கிரமம், அநியாயம், அமைச்சர்களின் சொத்து விவரங்கள், ஆணவ ஆபாச பேச்சுக்கள், அவர்களின் சுயநலன், அவர்களின் கபடநாடகம் போன்றவற்றை தோலுரித்து, ஒரு டிஜிட்டல் ஆவணத்தைதயார் செய்து வருகிறது, எதிர்க்கட்சிகள் இதை தமிழகம் முழுவதும் பரப்ப முடிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டிற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்த முறை திமுகவுக்கு மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என அரசியல் வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். மேலும் கண்டிப்பாக திமுக அடுத்த முறை ஆட்சி அமையாது என உளவுத்துறை ரிப்போர்ட்டும் முக ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் தான் திமுக  மாவட்டங்கள் பிரிப்பு, புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம், ஒதுக்கி வைத்திருந்தவர்களுக்கு திடீர் பதவி என தேர்தலை நோக்கி திமுக விறுவிறுப்பாக பயணப்படுவதாக வெளிப்பார்வைக்குத் தெரிகிறது.பாஜக கூட்டணி விமர்சனம் என பயத்தில் உளறி வருகிறார்கள்