
தென்னிந்திய பட்டாய கணக்காளர்கள் சங்கத்தின் கோவை கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொய் சொல்வதி போட்டி வைத்தால் திமுக அமைச்சர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, மத்திய அரசு மின்சார கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை என ஒரே போடாய் போட்டுடைத்துள்ளார்.
காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக உள்ளது. ஆனால் நிலக்கரியை இறக்குமதி செய்யும் போது கமிஷன் பெறுவதற்கும், தனியார் நிறுவனங்களை ஆதரிக்கவுமே மின்கட்டண உயர்வு பயன்பெறுவதாக கடுமையாக குற்றச்சாட்டினார்.
சாமானிய மக்களுக்கு மின்கட்டண உயர்வு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள மாநில தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் ஒரு மெகாவாட் காற்றாலை மின்சாரத்திற்கு 20 லட்சம் ரூபாயும், பெயர் மாற்றம் செய்ய 10 லட்சம் ரூபாயும் லஞ்சம் கேட்கின்றனர். இப்படி இருந்தால் எந்த தொழிலதிபர் காற்றாலை நிறுவ முன்வருவார் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஏற்றுமதி மதிப்பு, மின்வாரியம் எவ்வளவு நஷ்டத்தில் உள்ளது, நஷ்டத்திற்கான காரணம் என்ன என்றெல்லாம் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அடுத்தடுத்து அதிரடி கேள்விகளை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே வாட்ச் விவகாரத்தில் வாண்டடாக வந்து ஆஜராகி அண்ணாமலையிடம் ஆப்பு வாங்கிய செந்தில் பாலாஜி அண்ட் கோ, ரசீது கேட்டது குத்தமா போச்சே... இப்படியெல்லாம் அடுத்து உண்மையை அவிழ்த்துவிடுறாரே என புலம்பி வருவதாக கூறப்படுகிறது.