தமிழக ஊடகங்கள் மீது நடுநிலையாக செய்தியை வெளியிடவில்லை என்ற குற்றசாட்டு விமர்சனங்கள் எழுந்த காலம் மாறி தற்போது ஊடக துறையில் பணியாற்றும் சிலர் விளம்பர மோகம் காரணமாக நீல திரைப்படங்களுக்கு இணையாக இறங்கி இருபது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தனியார் ஊடகத்தில் பணியாற்றும் முக்தார் என்ற முக்தார் அஹமது பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த நபர்களை நேர்காணல் எடுத்து இருக்கிறார் பல அரசியல் கேள்விகள் அவர் எழுப்பியதை பலரும் பாராட்டி வந்து இருக்கிறார்கள் இருப்பினும் சமீபத்தில் முக்தார் திருச்சி சூர்யா என்பவரை கொண்டு எடுத்த நேர்காணல் மிக பெரும் அதிர்ச்சியை பொதுமக்கள் தாண்டி சக ஊடகதுறையில் பணியாற்றும் நபர்களையும் முகம் சுழிக்க செய்துள்ளது.
சாட்டிலைட் ஊடகங்களின் தரத்தை முக்தார் போன்ற தற்குறிகள் குறைத்து இருப்பதாக கொற்றை வேந்தன் குறிப்பிட்டுள்ளார் இவை அனைத்தையும் தாண்டி தனி பட்ட பெண்ணாக பாஜகவில் இணைந்த அலிஷா அப்துல்லா என்ற பெண் குறித்து பாஜகவில் இருந்து விலகிய திருச்சி சூர்யா குறிப்பிட்ட கருத்தை நீல பட விற்பனையாளர் போல முகத்தை ஆர்வமாக வைத்து கொண்டு முக்தார் கேட்டதும் அதையே திருப்பி திருப்பி இரட்டை அர்த்தத்தில் பேசியதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஊடகதுறையில் பணியாற்றும் பலரும் முக்தார் செயலை கடுமையாக கண்டித்து வருகின்றனர், இது போன்ற நெறியாளர்கள் ஊடகதுறையில் இருப்பதற்கு பதில் வேறு ஏதாவது தொழில் குறித்து சிந்திக்கலாம் என முக்தாருக்கும் எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதே போன்று தனிப்பட்ட தாக்குதல்களில் முக்தார் ஈடுபட்டால் விரைவில் அவரை ஊடகதுறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்பை தனியார் ஊடக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.