தமிழ் திரைப்படங்களில் காமெடி ரோல்களிலும், சில திரைப்படங்களில் வில்லன் கேரக்டர்களையும் சூப்பராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் தான் ஜான் விஜய்!! இவர் முக்கியமாக நெகட்டிவ் ரோல்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தார். மேலும் பில்லா, ராவணன், அங்காடி தெரு என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நல்ல ஒரு கதைக்களத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற ஆரம்பித்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ரேடியோவில் இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து தமிழ் திரைப்படங்களில் மட்டுமே முதலில் நடித்து வந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
இந்த நிலையில் வில்லன் கேரக்டர் இவருக்கு நன்றாக இருந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து வில்லன் கேரக்டரில் பல திரைப்படங்களை நடித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் ஜான் விஜய் மீது பிரபல பாடகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது இது குறித்து செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது திரைப்படங்களில் நெகட்டிவ் ரோல்கள் மூலம் பேமஸ் ஆகி தற்போது ஒரு முன்னணி வில்லனாக சினிமா வட்டாரத்தில் இருந்து வரும் ஜான்விஜய் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபல பாடகியான சின்மயி பல பாலியல் வன்கொடுமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில் தற்பொழுது ஜான் விஜய் மீதும் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து தனது இணையதள பக்கத்தில் பதிவினை செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜான் விஜய்க்கு எதிராக ஸ்கிரீன் ஷாட்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜான் விஜயின் நேர்காணலுக்காக காத்திருந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் தகாத முறையில் ஜான் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சின்மயி ஜான் விஜய்க்கு எதிராக பல புகார்களையும், தொடர்ச்சியாக ஸ்கிரீன்ஷாட்களையும் பகிர்ந்து வருகிறார். மேலும் மலையாள சினிமா வட்டாரத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அறிக்கைகள் எழுந்து வந்த நிலையில் ஜான்விஜய் பத்திரிக்கையாளரிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ஜான் விஜயால் பாதிக்கப்பட்ட பெண் கூறிய வார்த்தைகளையும் சின்மயி குறிப்பிட்டிருந்தார். அதில் நடிகர் ஜான் விஜய் சென்னையில் உள்ள கிளப்புகளுக்கும் பப்புகளுக்கும் அடிக்கடி செல்வதாகவும் அங்கு வரும் பெண்களை தவறான கண்ணோட்டத்துடன் பார்த்து அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வது வழக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சினிமாவில் பிரபலமாக இருப்பதால் பெண்கள் அவர் நடந்து கொள்ளும் அனைத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் அந்த பெண்களை தொடர்ச்சியாக தொல்லை செய்து வருவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.ஏற்கனவே ஜான்விஜய் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் மீ டூ இயக்கம் பிரபலமாக இருந்த சமயத்திலும் ஜான்விஜய் மீது தொடர்ச்சியாக பல பெண்கள் பாலியல் புகார் கலை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கு பதிலளித்த ஜான்விஜய்.. தான் மிகவும் வெளிப்படையான நபர் என்றும், சில சமயங்களில் தான் செய்யும் செயல் நகைச்சுவையாக எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதை புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பேசுவதை தவறாக யாரேனும் நினைத்தால் உடனே அவர்களிடம் பேசுவதை நிறுத்தி விடுவதாகவும் அந்த இடத்திலிருந்து வெளியேறி விடுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது இது குறித்து செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.