பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து அமைத்த IND கூட்டணிக்கு பெரிய தோல்வியை தழுவியதற்கு அதே கூட்டணியை சேர்ந்த ஒரு கட்சி நிகழ்த்தியது. அந்த கட்சி வேறு ஒன்றும் இல்லை தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக! திமுகவின் வாரிசு அரசியல்வாதியாக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு பங்கேற்று அந்த மாநாட்டின் தலைப்பையும் புகழ்ந்து பேசி சனாதனத்தை கொடிய வியாதிகளோடு ஒப்பிட்டு கண்டிப்பாக நிச்சயமாக சனாதனத்தை ஒழித்தே தீருவேன் என்று சனாதனத்தை இகழ்த்தி பேசியது இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் எழுவதற்கு காரணமாக அமைந்தது. பல தேசிய தலைவர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் அரசியல் விமர்சகர்கள் என பலரும் அமைச்சர் உதயநிதி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.ஆனால் திமுகவின் மற்ற நிர்வாகிகள் அமைச்சர்கள் உதயநிதியின் கருத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை முன்வைக்க அதுவே அவர்களுக்கு வழக்குகளை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளி விட்டது. இதனை அடுத்து அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சனாதனத்தை ஒழிப்பேன் என்று கூறிய அதே மேடையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மேடையை பகிர்ந்து இருந்ததும் தமிழகம் முழுவதும் எதிர்ப்பை பெற்றது.
ஏனென்றால் இந்து சமயத்தில் மறுபெயராக சனாதன தர்மம் உள்ள நிலையில் அதனை ஒழிப்பேன் என திமுக அமைச்சர் ஒருவர் கூறுகிறார் அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அவரது கருத்தை ஆதரிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு மேடையில் அமைதியாக அமர்ந்திருந்தது மூலம் அவர் இந்து சமயத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார் அதனால் அமைச்சர் சேகர்பாபுவே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் தமிழகத்தில் வலுவெடுத்தது. அது மட்டும் இன்றி தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கிறோம் என்ற தைரியத்தில் இருந்து வந்த திமுகவிற்கு இந்த விவகாரம் பெரும் அடியை கொடுத்தது. ஆனால் எந்த நேரத்தில் அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்பே என்று கூறினாரோ தெரியவில்லை அன்றிலிருந்து சனாதனத்தின் ஆதரவுகள் மற்றும் சனாதனத்தை பேணி காப்பது குறித்த விழிப்புணர்வுகளும் சனாதனத்தை காப்பாற்றும் நோக்கமும் எண்ணமும் மேலோங்கி வருகிறது. தற்போதெல்லாம் சமூக வலைத்தளத்தில் சனாதன தர்மம் குறித்த வீடியோ இடம்பெறாமல் அந்த நாள் முடிவதில்லை.
அதேபோன்று உலகில் உலகின் பல பகுதிகளில் வசித்து வரும் இந்து சமயத்தவரும் தங்கள் குழந்தைகள் மற்றும் அடுத்த தலைமுறைகளுக்கு சனாதன தர்மத்தை எடுத்துக் கூறி வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானமும் சனாதன தர்மத்தை காக்கும் பணியில் இறங்கி உள்ளது அதாவது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனாதன தர்மத்தை காக்கும் வகையில் இந்து சமய சனாதன தர்ம மாநாடு நடத்தியுள்ளது. திருப்பதி ஆஸ்தான மண்டபத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த மாபெரும் மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதிலும் குறிப்பாக வேற்று மதத்தவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்து மதத்தை தழுவ நினைத்தால் அவர்களை இந்து மதத்திற்கு மாற்ற திருமலையில் புனித நீர் தெளித்து இந்து மதத்தில் வரவேற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக திருமலையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்து மதத்தை பின்பற்ற வேறு மதத்தில் இருந்து மாறியவர்களுக்கு ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் திருமலை போல் திருப்பதி நகரையும் ஆன்மீக நகரமாக வைத்துக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தகவல் இடதுசாரிகளை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.