நடிகர் விஜய் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மன்றங்களை தொடங்கி அதன் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை செய்து வந்தார். வெகு நாட்களாக விஜய் சினிமா வாழ்க்கையில் அவரது படங்களுக்கு அரசியல் தலைவர்கள் மூலம் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், விஜய் விரைவில் கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. கடந்த இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அந்த கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது என்பது போன்று அரசியல் தலைவர் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தை தருவதே லட்சியம் எனவும் அறிவித்துள்ளார். விஜய் தனது அறிக்கையில் திமுக, அதிமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக சீண்டியிருந்தார் என சினிமா வட்டாரங்கள் சிலர் தெரிவித்தனர். விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விரைவில் பொறுப்பாளர்களை நியமிக்கப்படலாம் எனவும் அதில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைந்து நியமிக்க வாய்ப்பு இருப்பதாக சில தகவல் வந்தன. இதுவரை அவரது கட்சியின் கொள்கைகோட்பாடுகளை வெளியிடவில்லை.
இந்நிலையில், கட்சி பெயர் அறிவித்த அன்றே இணையத்தில் #TVK என்ற பெயர் உலகளவில் ட்ரெண்ட் செய்து வந்தனர். ஒருபக்கம் விமர்சனமும் வந்தது. அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் ஆங்கில சுருக்கமான TVK என்பது தமிழகத்தில் ஏற்கனவே ஒரு கட்சி உள்ளது என தொடர்ந்து விஜய்க்கு மாறாக மீம்ஸ் போட்டு வந்தனர். மேலும், ஆராய்ந்து பார்க்காமல் விஜய் சட்டென்று முடிவெடுத்துள்ளார் என விமர்சனம் வந்தது. இதை கண்டுகொள்ளாமல் சினிமாவில் ஆர்வம் காட்டிய விஜய்க்கு, தற்போது தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களின் கட்சியை ஆங்கிலத்தில் சுருக்கமாக TVK என்று அழைக்கப்படும்.
இந்நிலையில் வேல்முருகன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “TVK என்பது தமிழக வாழ்வுரிமை கட்சி என்பதன் ஆங்கில சுருக்கம். விஜய் தற்போது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஆவணங்களை சமர்பிக்கும்போதுதான், TVK என்ற ஒரு கட்சி வேல்முருகனை நிறுவனராக கொண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு TVK என்ற பெயரை தர முடியாது. TVK என்பதுடன் வேறு ஏதாவது எழுத்து வருவது போல மாற்றி அமைத்துக்கொண்டு வாருங்கள் என தேர்தல் ஆணையம் சொல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்” என கூறினார். அப்படி தேர்தல் ஆணையம் வழங்கினால் தேர்தல் ஆணையத்தில் நிச்சயம் முறையிடுவோம் என தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி ஆரம்பித்து ஒரு வாரமான நிலையில் தற்போது பலவகையான குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஒரு பக்கம் விஜய் கட்சி பெயர் மறுபக்கம் ஊடகங்களை எப்படி விஜய் சமாளிக்க போகிறார். எல்லாத்துக்கும் அவரது உதவியாளர் புஸ்ஸீ ஆனந்த் பார்த்துகொள்ளவர் என்றால் மக்கள் விஜயை பார்த்து கொள்ளமாட்டார்கள். இது ஒரு தொடக்கத்திற்கான புள்ளியே தவிர முடிவுரை என்பது விஜய் எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. விஜய் கட்சி பெயர் வேல்முருகனுடன் ஒப்பிட்டு மீம்ஸ் வருவது என்பது குறிப்பிடத்தக்கது.