கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக பொறுப்பில் இருந்தது, அதுவும் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் அதிமுக முதலில் ஆட்சி பொறுப்பை ஏற்றது இதற்கு பிறகு அவரின் மறைவிற்கு அடுத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார் துணை முதல்வராக பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது இருவருக்கும் இடையே சில சச்சரவுகள் மற்றும் பிரச்சனைகள் இருப்பதாக பேசப்பட்டு வந்தது அந்த பிரச்சனை 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வெடித்து அரசியல் வட்டாரங்கள் முழுவதும் பேசுபொருளாக மாறியது. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக பிரதான எதிர்க்கட்சி என்ற பொறுப்பை வகித்து வந்தது இருப்பினும் அதிமுகவின் பொதுச் செயலாளராக யாரை தேர்ந்தெடுப்பது அல்லது நான் தான் பொதுச் செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே தகராறு மூண்டது மேலும் இந்த தகராறு இரு தரப்பினர்கள் மத்தியிலும் வலுவெடுத்தது. இவனை அடுத்து நீதிமன்ற வழக்குகளை நாடி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
எனினும் அதிமுகவின் கட்டிடத்தை இருதரப்பினர் ஆதரவாளர்களும் அடித்து நொறுக்கி தெருச்சண்டையில் ஈடுபட்டதும் செய்திகளில் பரபரப்பாக வெளியானது. இறுதியாக இருவரும் இரண்டு வெவ்வேறு கட்சியாக உருவெடுக்கும் வகையில் தற்போது எதிர்த் அணியாக இருந்து வருகின்றனர் மற்றும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே சமயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்து ஒரு பிரதான எதிர்க்கட்சியாகவும் அதிமுகவின் சின்னம் மற்றும் பெயர் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற அங்கீகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்தது. இதனை அடுத்து பாஜகவின் கூட்டணியில் தொடர்ந்து வந்த அதிமுக தற்பொழுது பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிமுக தரப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா அம்மா குறித்தும் அறிஞர் அண்ணா குறித்தும் அவதூறாக பேசினார் அதனாலயே அவரது பேச்சிருக்கும் இனி மேலும் கூட்டணியை தொடர முடியாது என்ற வகையிலான ஒரு காரணத்தை தெரிவித்து அதிமுக பாஜக கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்தது.
இந்த நிலையில் தேர்தலுக்கான ஆயத்த வேலைகளில் தமிழகத்தின் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக இறங்கி உள்ளது அதன்படி அதிமுகவும் தனது தேர்தல் வேலைகளில் ஈடுபடும் பொழுது தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு தற்போது குறைந்துள்ளதாகவும் பாஜக அதிமுகவின் கூட்டணியை விட்டு விலகி இருந்தாலும் பாஜகவின் செல்வாக்கை தற்போது உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அதிக ஆதரவுகளை கொண்டிருந்த முக்குலத்தோர் சமுதாயத்தில் அதிமுகவின் ஆதரவு என்பது முற்றிலும் சரிவை கண்டுள்ளதாக பேசப்பட்டது. இந்த நிலையில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பி எம் கே மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கி ராஜா என்பவர் தேவரின் சிலை முன்பு நின்று கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நமது ஒற்றுமையை காட்ட வேண்டும்! நமக்கு செய்த துரோகத்தை நாம் மறந்து விடக்கூடாது! எடப்பாடியை கனவில் கூட நினைத்து விடாதீர்கள், எங்க ஐயா முத்துராமலிங்க தேவர் இருக்கிறது உண்மையானால் அவர் மீது சத்தியமா சொல்றேன் கண்டிப்பா இந்த நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி 40க்கு பூஜ்ஜியம் தான் வாங்குவார், நாங்க வாங்க வைப்போம் என்று உறுதியாக பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும் முக்குலத்தோர் சங்கத்தின் முக்கிய இயக்கத்திலிருந்து இப்படி ஒரு வீடியோ வெளியாகியிருப்பது பாஜகவிற்கு சாதகமாக மாறும் என்று கூறப்படுகிறது.