24 special

பிச்சை எடுப்பது போல் நடித்து நூதன முறையில் திருடிய பெண்கள்..?

jenifer
jenifer

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் வசித்து வருபவர் தனியார் வங்கி ஊழியர் ஸ்டீபன்ராஜ் இவர் வேலைக்கு சென்ற நிலையில் இவரது மனைவி ஜெனிபர் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்தனர் அப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் 6 பெண்கள் கைக்குழந்தைகளுடன் பிச்சை எடுப்பது போல் நடித்தனர். அப்போது கைக்குழந்தையுடன் இரண்டு பெண்கள் ஜெனிபர் வீட்டின் முன்பாக நின்று கொண்டு தண்ணீர் கேட்ட நிலையில் ஜெனிபர் தண்ணீரை எடுப்பதற்காக உள்ளே சென்றார் அந்த நேரத்தில் ஒரு பெண் பின் பக்கமாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை பெட்டிகளை எடுத்து ஓட முயன்றார்.


அப்பொழுது அந்த பெண் அறையிலிருந்து வெளியே வந்த சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடிச் சென்று ஜெனிபர் நகைகளை திருடிய பெண்ணை பிடித்தபோது வெளியே நின்ற பெண் இருவரும் அந்த தெருவில் பிச்சை எடுப்பது போல் நடித்துக் கொண்டிருந்த 4 பெண்கள் உட்பட 5பேரும் தப்பி ஓட முயன்றனர் அப்போது ஜெனிபர் அலறல் சத்தம் போட்ட நிலையில் அந்தப் பகுதியில் இருந்தவர்கள் சுமார் 500 மீட்டர் விரட்டிச் சென்று 4 பெண்களையும் மடக்கிப் பிடித்து இழுத்து வந்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் ஒருவர் மட்டும் பிடிபடாமல் தப்பிச் சென்றார். இதையடுத்து பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் 5 பேரும் ஈரோட்டைச் சேர்ந்த மீனாட்சி, முத்தம்மாள், மங்கம்மாள், முனியம்மாள், கவிதா என்பது தெரியவந்தது இதையடுத்து அவர்கள் ஜெனிபர் வீட்டில் திருடி வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெண் குறித்து எதுவும் தெரியாது என்று கைதான பெண்கள் தெரிவித்த நிலையில் கைக்குழந்தைகளை தூக்கிச் சென்று பிச்சை எடுப்பது போல் நடித்து வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டு இவர்கள் செயல் பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பெண்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.