உக்ரைனை, உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது நூற்றுக்கணக்கான டாங்குகளுடனும் பீரங்கிகளுடனும் தாக்க ஆரம்பித்ததும், பலம் குறைந்த அண்டை நாடான உக்ரைனால் 48 மணி நேரம் கூட தாக்குபிடிக்க முடியாது என்று கணிக்கப்பட்டது. இன்று 12வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க தயாரிப்பு ஜாவ்லின் டாங்கி எதிர்ப்பு இலகு ஏவுகணை எப்.எம்.ஜி.-148 ஜாவ்லின் என்று அழைக்கப்படும் இலகு ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை (சுருக்கமாக ஜாவ்லின்) பல நாட்டு பாதுகாப்பு படைகளின் கனவு ஆயுதமாக இருக்கிறது.
6.4 கிலோ(லான்சர்) மற்றும் 15.9 கிலோகிராம் நிறையுடைய இரண்டு பாகமாக இருக்கும் ஜாவ்லினின் மொத்த எடை 22.5 கிலோகிராம் தான். இலக்கை இன்ஃப்ரா தொழில்நுட்பத்தின் மூலம் இலக்கை கண்டறிந்து ஃபையர் அண்ட் ஃபர்கெட் (fire and forget ) முறையில் இயங்கக் கூடியது. அதாவது, தாக்கவேண்டிய இலக்கை சிறிய திரையில் குறித்துவிட்டு பட்டனை அழுத்தினால் இலக்கை தானாகவே ட்ராக் செய்து தேடிச்சென்று, குறி தவறாமல் தாக்கும் திறன் கொண்டது.
அமெரிக்க நட்பு நாடுகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்த அதி நவீன ஆயுதம், தற்பொழுது நூற்றுக்கணக்கில் உக்ரைனிடம் இருக்கிறது. 400 வரையிலான லான்சர்களும் 1200க்கும் குறையாத ஏவுகணைகளும் உக்ரைனிடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, இவற்றை வைத்து 1200 ரஷ்ய டாங்குகள் மற்றும் பீரங்கிகள் வரை அழிக்க முடியும். எப்படி தாக்கும் ஜாவ்லின்?
தனி ஒருவரால் சுமந்து சென்று தாக்கக் கூடிய ஜாவ்லின் ஏவுகணை, இதுவரை 300 தடவைக்கு மேல் ரஷ்ய பீரங்கிகள் மற்றும் டாங்குகளை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 280 தடவை குறிதவறாமல் இலக்கு அழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதாவது, 93 சதவிகிதம் இலக்கு தறவறாமல் ரஷ்ய டாங்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாவ்லினின் தாக்குதல் தூரம் 2.7 கிலோமீட்டர் என்று குறிப்பிட்டப்பட்டாலும், ஆப்கானில் அது 4.7 கிலோமீட்டர் தூர இலக்கையும் தாக்கி அழித்ததாக பதிவுகள் உண்டு.ஜாவ்லினால் டாங்குகள், பீரங்கிகள் என்று இல்லாமல் ஹெலிகாப்டர்கள் மற்றும் சில ரக விமானங்களையும் நேரடியாக குறிவைத்து தாக்க முடியும்.
175 ஆயிரம் டாலர்கள் வரை விலையுள்ள ஜாவ்லின் ஏவுகணை, ரஷ்யாவின் 10 லட்சம் டாலர்கள் வரை விரையுள்ள பீரங்கிகள், டாங்குகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதும், தற்போது ரஷ்யா உக்ரைனில் திணறுவதற்கும், சில ரஷ்ய வீரர்கள் டாங்குகள் மற்றும் தங்கள் வாகனங்களில் இருந்து குதித்து ஓடுவதற்கும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லாயிரம் டாலர்கள் மதிப்புள்ள தனது T-72 போன்ற டாங்குகளை இழக்க ரஷ்யா விரும்பாமலும் இருக்கலாம். இந்தியாவிடம் ஜாவ்லின்:கடந்த 2013ல், ஜாவ்லின் ஏவுகணைகளை வாங்க முயற்சி செய்த இந்தியா, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பின், ஏதோ பல காரணங்களுக்காக அந்த முயற்சியை கைவிட்டு, இதே வகையைச் சேர்ந்த இஸ்ரேல் தயாரிப்பு 'ஸ்பைக்' ஏவுகணைகளை வாங்க 2014ல் முடிவு செய்தது. Writer:Darsan Ramasamy, Edit: Janani Ganeshan
More Watch Videos