24 special

எதிர்பார்த்த கனிமொழி தூத்துக்குடி மக்கள் செய்த காரியம்!

mkstalin, kanimozhi
mkstalin, kanimozhi

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் பரவலான இடத்தில் மழை பொழிந்தது அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த மழை அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் புரட்டிப் போட்டது. சென்னையில் ஏற்பட்ட புயல் அதனால் பெய்த மழை, மழைநீர் வடியாமல் மாநகர முழுவதும் தேங்கி குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தது தமிழக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது அதேபோன்று தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பெய்த மழையும் இதுவரை தென் மாவட்டங்கள் கண்டிராத மழையாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி தென் மாவட்டங்களிலே தூத்துக்குடியானது அதிக பாதிப்பை சந்தித்து பல பகுதிகள் தீவுகளாக காட்சி அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் போக்குவரத்து சாலை விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தும் சேதமடைந்தது பல போக்குவரத்து சாலைகளின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின்சார கம்பிகள் அருந்து விழுந்து இருந்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது.


மேலும் மழையால் பலர் உயிரிழந்து அவர்களின் சடலங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் தூத்துக்குடி பெரும் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகிகள் ஒருவர் கூட அங்கு இல்லை மத்திய அரசு மழைக்கான முன்னெச்சரிக்கை கொடுத்து மக்களை பாதிப்பிலிருந்து மீட்க அதிகாரிகளை அனுப்பிய பிறகே பாதிக்கப்பட்ட இடத்தைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர் மற்றும் பொறுப்பு நிர்வாகி வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தமிழகத்தின் மிக முக்கிய நகரங்கள் மழையால் பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் உண்ண உணவும் இருக்க இடமும் இன்றி தவித்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் டெல்லி சென்று INDI கூட்டணியில் தனது கூட்டணியை தக்கவைத்துக் கொண்டது பெரும் விமர்சனத்தை பெற்றது. இதனால் தமிழக முழுவதும் திமுகவிற்கு எதிரான எதிர்ப்பாலை வீச ஆரம்பித்தது. அதோடு தூத்துக்குடியில் இனி அடுத்த திமுகவைச் சேர்ந்த யாரையும் வேட்பாளராக வரட்டும் அவர்களுக்கு தோல்வி நிச்சயம் என்ற வகையில் தூத்துக்குடி மக்கள் திமுக மீது கடும் கோபத்தையும் அதிருப்திகளையும் அள்ளி வீசினர். 

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தூத்துக்குடி அமைச்சர் கனிமொழி தூத்துக்குடி பகுதியில் மீண்டும் திமுக போட்டியிடலாமா திமுக போட்டியிட்டால் மக்கள் வெற்றியடைய வைப்பார்களா என்பது குறித்த ஒரு சர்வே எடுத்துள்ளார். அந்த கருத்துக்கணிப்பில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதிருப்திகள் திமுக மீது வலுவாக உள்ளது, இதனால் திமுக தூத்துக்குடியில் போட்டியிட்டால் நிச்சயமாக தோல்வியை எதிர்கொள்ளும் என்றும் இதுவரை கண்டிராத அளவிற்கான எதிர்ப்புகள் தூத்துக்குடி மக்கள் மத்தியில் திமுகவிற்கு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கோரிக்கை மனுக்களை மக்களிடமிருந்து சேகரிக்க தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்களின் தலைமையில் திமுகவின் ஒரு குழு சென்றுள்ளது அந்த குழுக்களிடமும் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியதோடு கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் அதற்குப் பிறகு புதிய வாக்குறுதியை கேட்கலாம் என்று விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கனிமொழி தரப்பு தூத்துக்குடி தொகுதியை மாற்றலாமா என யோசித்து வருவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.