24 special

என்னமா பண்ற? எதாவது பண்ணும்மா...! தலைமையிடமிருந்து பறந்த உத்தரவு...! மேயர் பிரியாவிற்கு ஆரமித்த தலைவலி...!

Mkstalin, Mayor priya
Mkstalin, Mayor priya

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சாலையில் சென்றிருந்த மாடு பள்ளி சிறுமியின் பக்கம்  திடீரென்று திரும்பி முட்டி தள்ளியதால் அச்சிறுமி படுகாயம் அடைந்ததுடன் தற்போது அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி அனைவரின் நெஞ்சை உலுக்கி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளிச் சிறுமி மற்றும் அவரது தாயார் பள்ளி முடிந்து சாலையில் நடந்து  வரும் போது சாலையில் எதார்த்தமாக நடந்து சென்றிருந்த மாடுகள் திடீரென சிறுமியின் பக்கம் திரும்பி தாக்குதல் நடத்த ஆரம்பித்தது சிறுமியின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாட்டை பிரம்பு கம்பால் துரத்த முயற்சித்த போதும் மாடு விடாமல் சிறுமியை முட்டி தள்ளியது சென்னையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


இவ்வாறு மாட்டை சரியான முறையில் கட்டி வைக்காமல் ரோட்டில் அவிழ்த்துவிட்டு சிறுமியின் மீது முட்டும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்பொழுது படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னையில் இதுபோல் சாலையில் பசு மாடுகளின் தொல்லை தொடர்ந்து வருவதாக பல புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதை தடுப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மக்கள் கேள்வியை எழுப்பி வருகின்றனர்

சென்னையில் இதுபோல் ஏதாவது விவகாரம் நடக்கும் போது தேவையில்லாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி சென்னை மேயர் பிரியா மாட்டிக் கொள்வார் அதேபோல் சிறுமியை மாடு முட்டிய விவகாரம் குறித்து சென்னை மேயர் பிரியா வழக்கம் போல தனது கருத்தை தெரிவித்துள்ளார். மேயர் பிரியா செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும் போது சென்னையில் மாடு பிரச்சனை அதிகமாகி உள்ளது என்றும் இந்த பிரச்சனை தீர்ப்பதற்கு சென்னை மாநகராட்சியில் இருந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் இதற்கு முன்னால் சாலையில் செல்லும் மாடுகளை பிடித்தால் 1500 வரை மாட்டின் உரிமையாளிடமிருந்து வசூல் செய்ததாகவும் ஆனால் தற்போது  மூவாயிரம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாக கூறினார் இது மட்டும் இல்லாமல் இதுவரை சென்னை மாநகராட்சியில் 500 முறை மாடுகள் பிடிக்கப்பட்ட நிலையில் 2500 மாடுகள் சிக்கி உள்ளதாகவும் இதன் மூலம் 5.18 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவலை தெரிவித்தார்

மாடுகள் சாலையில் திரிவதை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தற்போது நடந்த சிறுமியை மாடு முட்டிய சம்பவம் எதிர்பாராமல் நடந்தது என்று கூறியதோடு சிறுமியை முட்டிய மாட்டை பெரம்பலூரில் வைத்து ராபிஸ் இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறினார் மேலும் மாட்டுக்கு ராபிஸ் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் சிறுமிக்கும் சோதனை மேற்கொள்ளப்படும் என்ற தகவலையும் தெரிவித்தார்.

சிறுமியை மாடு முட்டிய இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னையில் கால்நடைகள் விவகாரத்தில் விரைந்து அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைமையிடமிருந்து மேயர் பிரியாவுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளதாம்..! மேலும் சென்னையில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், இந்த சம்பவம் தொடர்ந்து மீடியாக்களில் பேசி சர்ச்சையை ஏற்ப்படுத்தாமல் இருக்கவும் மேயர் பிரியாவிற்கு உத்தரவு பறந்துள்ளதாம்...! அதனாலதான் மாடு முடிய சிறுமி வீட்டிற்கு மேயர் பிரியா சென்றதும் அதன் பின்னணியில் சென்னையில் மாடுகள் சாலையில் திரிவது மீதான நடவடிக்கை எடுக்கப்படும் என மீடியாக்களிடம் கூறியதும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.