Tamilnadu

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு யாருக்கு எதிராக முடியும் அர்ஜுன் சம்பத் பரபரப்பு கருத்து!

modi and arjun sampath
modi and arjun sampath

விவசாய சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார், மிகவும் பயனுள்ள நல்ல சட்டத்தை எத்தனையோ முறை முயன்றும் சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என தெரிவித்தார் பிரதமர், இந்த சூழலில் பிரதமர் கருத்திற்கு ஆதரவாக மற்றும் எதிராக மிக பெரிய விவாதம் நடந்துவரும் வேலையில்.,


இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் புதிய வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெறுவது குறித்த பிரதமர் அறிவிப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அர்ஜுன் சம்பத் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு - பிரதமர் மோடி, நல்ல சட்டம் ஆனால் சிலருக்கு புரியவைக்க முடியவில்லை என சொல்லி இருக்கார். முதன்முறையாக பாஜக மத்திய அரசு ஒரு விஷயத்தில் இருந்து பின் வாங்கி இருக்காங்க... ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் இந்த 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதித்திருக்காங்க...

உர மற்றும் விதை மானியம் மூலமாக உற்பத்திச் செலவை குறைப்பது,பயிர்க்காப்பீடு மூலம் இழப்புக்களைத் தவிர்ப்பது, கொள்முதல் விலையை அதிகரிப்பது.வருடம் 6000 விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் அளிப்பது.வேளாண் சட்டங்கள் மூலம் வியாபார போட்டியை அதிகரித்து விவசாய பொருட்களுக்கு நல்ல விலை பெற்றுத் தருவதுஇதன் மூலமாக விவசாயிகளின் வருமானத்தை இரெட்டிப்பாக்குவது என்பது தான் மத்திய அரசின் விவசாயக் கொள்கை.

இதனை சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியல..நல்லது செய்தும் பெயரைக் கெடுத்துக்கணுமா என்ற எண்ணமும், ஜன நாயக அரசியலில் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது.

எதிர்கட்சிகளின் பொய்ப்பரப்புரைக்கு கிடைத்த வெற்றி தான்.. எது எப்படியோ இந்த பின்வாங்கும் முடிவு பாஜக எனும் கட்சிக்கு நல்லது.ள்,விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான், மோடி அகங்காரம் பிடித்தவர் கடுமையான மனிதர் என்கிற பிம்பத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் செய்த முயற்சிக்கு இது ஒரு நல்ல பதிலடியாக அமைந்திருக்கிறது என அர்ஜுன் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.