விவசாய சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார், மிகவும் பயனுள்ள நல்ல சட்டத்தை எத்தனையோ முறை முயன்றும் சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என தெரிவித்தார் பிரதமர், இந்த சூழலில் பிரதமர் ஏன் சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றார்.
விவசாயதுறை அமைச்சர் மூலமாகவோ அல்லது அறிவிப்பு மூலமாகவோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கலாம் ஆனால் அதனை செய்யாமல் பிரதமரே நேரடியாக விவசாய சட்ட திருத்தத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து சமூக செயற்பாட்டாளர் பானு கோம்ஸ் மற்றும் பிரதமர் மோடி ஆதரவாளர் செல்வநாயகம் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.. பானு கோம்ஸ் இது குறித்து தெரிவித்த கருத்தில்..
3 விவசாய சட்டங்களும் திரும்பப் பெறப் பட்டதன் விளைவு , 1 + 1/4+1/4 = 1 1/2 மாநிலத்தில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் + அதற்கான சர்வதேச ஆதரவு என்று உருவாக்கப்பட்டிருந்த பிம்பத்தின் அரசியல் களம் செய்வதறியாது திகைத்து நிற்கிறது என குறிப்பிட்டுள்ளார் அதாவது விவசாய போராட்டத்தை வைத்து மோடி அரசிற்கு எதிராக சர்வதேச அளவில் நடைபெற்ற செயல்கள், அதனை செயல்படுத்திவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்பதாக சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் ஆதரவாளர் செல்வநாயகம் குறிப்பிட்டதாவது பொதுவாக முன்வைத்த காலை பின்வைக்காதவர் மோதி ஜி. கொண்டு வந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை: நிதின் காட்கரி கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதா. இம்முறை: "மண்டிகளில் மட்டுமே விற்கலாம்" என்றிருந்ததை மாற்றி, "எங்கும் விற்கலாம்" என்ற விவசாய சட்ட திருத்தங்கள்.
இந்த சட்ட திருத்தங்களை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை செய்துள்ளது. உச்சநீதிமன்றம் அமைத்த குழுவுடன் இந்த விவசாய புரோக்கர்கள் பேச்சுவார்த்தையும் நடத்த மறுத்தனர். என்றாலும், திரும்பப்பெறுகிறது மோதி அரசு.
மத்திய அரசு கொண்டு வந்த திருத்தங்களை மாநில அரசுகள் நிறைவேற்றும்?? பாஜக ஆளும் மாநிலங்கள் பல மண்டி முறையை ஏற்கனவே நீக்கிவிட்டன. விவசாயிகள் குறைந்தபட்ச விலையை (எம்.எஸ்.பி) அவர்களது வங்கிக் கணக்கில் மட்டுமே பெற முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்திவிட்டது மத்திய அரசு. அதோடு, எம்.எஸ்.பியில் விற்கும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். காண்டிராக்ட் விவசாயம், warehousing எல்லாம் பல பாஜக மாநிலங்களில் வந்து விட்டன.
சட்டத்தை திரும்பப் பெறுவது "அரசுக்கு தோல்வி, நாட்டுக்கு நல்லதில்லை" என்றாலும், எதிரிகட்சிகள் அரசியல் லாபம் தேடுவது நிற்கும், அடுத்த 5 மாநில தேர்தல்களில் - குறிப்பாக பஞ்சாபில் - பாஜகவுக்கு அரசியல் ரீதியாக லாபம். பாஜகவுடன் கூட்டு வைக்க இனி முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு தடையில்லை.
இந்த போராட்டத்தால் பல காலிஸ்தானிகள் சிக்கினார்கள். கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இயங்கும் இந்தியா விரோத சக்திகள் வெளிச்சத்துக்கு வந்தன. அவர்களது விசா & OCI அட்டைகள் இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டன.
மத்திய அரசு செய்ய வேண்டியதை மாநில அரசுகள் செய்யும். சட்டத்தை திரும்பப் பெறுவதால் பாஜகவுக்கு லாபம், எதிரிகட்சிகளுக்கு நட்டம்! இந்த விவகாரம் சொல்லும் இன்னொரு விஷயம்: நீதிமன்றம் போனால் தீர்வு கிடைக்காது, இழுத்தடிப்பார்கள். அரசியல் தீர்வே நிலையானது.
புரளி கிளப்பிய எதிரிகட்சிகளையோ, சீன பன்றிஸ்தான் ஆதரவு காலிஸ்தானிகளையோ குறை சொல்லாமல், "சில விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை" என்று சொல்லி, பழியை தன் மேல் எடுத்துக் கொள்ளும் மோதி ஜி, ஆண்டாளின் திருப்பாவை 15ஆவது பாசுரத்தை (எல்லே இளங்கிளியே…. நானே தான் ஆகிடுக) சேவித்திருப்பார் என்பது என் கருத்து என குறிப்பிட்டுள்ளார் செல்வ நாயகம்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.