Cinema

வெளியான பிக்பாஸ் அதிகாரபூர்வ டைட்டில் வின்னர்..!

Maya, Kaamalhassan
Maya, Kaamalhassan

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 இன்றுடன் நிறைவுக்கு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று தமிழ்நாட்டில் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். முதல் சீசனிலிருந்தே களைகட்டும் இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. மொத்தம் 100 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட், தானாக வெளியேறிய பவா செல்லதுரை போக மற்றவர்கள் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று நடக்கும் கிராண்ட் பைனலில் யார் வெற்றி பெற போகிறார் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் கமல் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தியாக மாறியுள்ளது.


2017ம் ஆண்டு பிக்பாஸ் முதல் பாகம் தொடங்கியது, அன்றிலிருந்து இன்று வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முதல் சீசன் தொடங்கியதில் இருந்து யாரேனும் ஒருவர் என்னால் இந்த வீட்டில் இருக்கமுடியவில்லை என்று தானாகவே வீட்டில் இருந்து வெளியேறுவது தொடர்கதையாகஇருந்துள்ளது . ஒரு  கஞ்சா கருப்பு, ஜி பி முத்து என பலர் சென்றுள்ளனர். இந்த ஏழாவது சீசனை பொறுத்தவரை பல சம்பவங்கள் நடந்துள்ளது. பவா செல்லதுரை மன உளைச்சல் காரணமாக வீட்டில் இருந்து வெளியேறினார். அதன் பின் இந்த சீசனில் பிரதீப் ஆண்டனி தான் டைட்டில் வின்னர் என மக்களால் பேசப்பட்டது ஆனால் அவர் பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்பினார் இதனால் மக்கள் பலரும் பிக்பாஸ் மீது கோபத்தில் இருந்தனர்.

அந்த வரிசையில் அடுத்ததாக வனிதா விஜயகுமார் மீது தாக்குதல் நடத்தியது நகைச்சுவையாக பேசப்பட்டது. யாருனு தெரியாத ஒருவர் தன்னை பிரதீப் பெயர் சொல்லி தாக்கியதாக கூறினார். ஆனால், காவல்துறையில் இது குறித்து எந்த வித புகாரும் தெரிவிக்கவில்லை. இந்த சீசனை பொறுத்தவரை மவுன விருத்தத்தில் இருந்த கூல் சுரேஷும் வெளியில் அனுப்பப்பட்டார். வெளியில் பல கண்டெண்டுகளை கொடுக்கும் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டில் சென்றதும் எந் கண்டென்ட்டும் கொடுக்காததால் அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக வைல்ட் கார்ட் என்ட்ரி நடைபெற்றது அதில் மாயா, விஜே அர்ச்சனா உள்ளிட்டவர்கள் வீட்டிற்கு வந்தனர். இப்படி பல சுவாரசிய சம்பவங்கள் நடந்த நிலையில் இன்று இறுதிக்கு வந்துள்ளது.

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த யாருமே டைட்டிலை வெல்லவில்லை. முதல் சீசனிலேயே சுஜா வருணி வைல்டு கார்டாக நுழைந்து கடைசி வரை டஃப் போட்டி கொடுத்திருப்பார். இந்த சீசனில் வந்த மாயாவுக்கு கமல்ஹாசன் பல உதவிகளை செய்து வந்ததால் டைட்டில் வின்னர் மாயா என்று தான் பேசப்பட்டது. இப்போது மாயா இல்லை விஜே அர்ச்சனா தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்ற அதிகாரபூர்வ தகவல் கசிந்துள்ளது. கடந்த சீசனில் மல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளரான விக்ரமனுக்கு டைட்டில் கிடைக்காமல் அசீமுக்கு கிடைத்தது. இந்நிலையில், இந்த சீசனிலும் கமல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளரான மாயாவுக்கு டைட்டில் கிடைக்காமல் அர்ச்சனாவுக்கு கொடுத்துள்ளனர் எனக் கூறுகின்றனர். இப்படி கமல்ஹாசன் நம்பிக்கை வைத்திருக்கும் யாரும் இது வரை வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஒளிபரப்பாகவுள்ள கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கருப்பு உடையில் கலக்கலாக கமல்ஹாசன் என்ட்ரி கொடுத்து போட்டியாளர்களை வீட்டில் இருந்து பிக் பாஸ் அரங்கத்திற்கு அழைத்து வர உள்ளார். கடந்த ஆண்டு வான் வழியாக போட்டியாளர்கள் வந்த நிலையில், இந்த ஆண்டு என்ன மேஜிக் செய்யப் போகின்றனர் என்பதை நிகழ்ச்சியில் கண்டு ரசிக்கலாம் ரன்னர் அப் குறித்து பல பேர் வந்து கொண்டு தான் இருக்கிறது. அடுத்த சீசனில் கமல்ஹாசன் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வந்தது. இன்று அது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.