திரைத்துறையில் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்தின் மூலமே மக்கள் இடத்தில் இடம் பிடித்த இவர் தற்போது அதே மக்கள் வெறுக்கும் அளவிற்கு சில காரியங்களை செய்து வரும் கார்த்தி மற்றும் அவரது அண்ணன் சூர்யா என்று அவரது குடும்பமே தொடர்ந்து விமர்சனத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கார்த்தி நடத்திய விழா ஒன்று மூலம் யப்பா போதும் உங்க நடிப்பு திறன் என்றளவிற்கு விமர்சனம் எழுந்துள்ளது.
சினிமாவில் முன்னனி நடிகரான கார்த்தி திரையில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக வெளியான 25வது படமான ஜப்பான் படமும் பெரும் அளவில் எதிர்பார்த்தனர் ஆனால் அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இவர்களது குடும்பம் வைத்த விமர்சன கருத்து ஏராளமானது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் அனைத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்த சூர்யா மற்றும் கார்த்திக் தற்போது மவுனம் காத்து வந்தனர்.
சூர்யா குடும்பத்தை பொறுத்தவரை அவர்கள் குடும்பத்தாரின் படம் வெளியாகப்போகிறது என்றால் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் நல்லது செய்வது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொள்ளுவார் அதே போல் நடிகர் கார்த்தியும் விவசாயிகளுக்கு 'உழவன் பவுண்டேஷன்' மூலம் விருது கொடுத்து விவசாயிகளுக்கு தேவையான உதவி செய்வதாக பேசிவருவார். அந்த வகையில் கடந்த ஓராண்டாக சுருவின் படம் ஏதும் வரவில்லை என்பதால் அகரம் மூலம் சமீபத்தில் எந்த விழாவும் தொடங்கியது போல் தெரியவில்லை. நடிகர் கார்த்தி ஜப்பான் படம் தோல்வியை அடுத்து அடுத்த படத்தில் கவனம் செலுத்தும் இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்திருந்தார்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசும் போது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது. என தொடர்ந்து விவசாயிகளை புகழாரம் சூட்டி வந்தார் இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது சினிமா வட்டாரத்தை சேர்ந்த சினி விமர்சகர்கள், கார்த்தி நீங்கள் நடத்திய விழா ஒன்றும் குறை சொல்லவில்லை எதற்காக திடீரென்று இந்த ஏற்பாடு எப்போதும் அதிமுக ஆட்சி காலத்தில் தானே இப்படி விளமபரம் பண்ணுவீர்கள் திமுக ஆட்சி காலத்தில் எதற்காக இந்த விழா, இதே விவசாயிகள் தான் கடந்த மாதங்களுக்கு முன்பு இந்த தமிழக அரசின் மூலம் குண்டாஸ் போடப்பட்டு எதிர்ப்பு கிளம்பியது, இதே விவசாயிகள் தான் தங்கள் நிலத்தை இங்கு ஆட்சி செய்யும் அரசாங்கம் அபகரித்தது அப்போது நீங்கள் எங்கே போனீர்கள்? அப்போது எல்லாம் மவுனம் காத்து வந்த ணெண்ங்கள் இப்போது உங்களது இரண்டாவது முகத்திரை காட்ட என்ன காரணம்? என்ற கேள்வி எழுப்புகின்றனர்.
கார்த்தி சமயம் பார்த்து முகத்தை காட்டி விட்டார் ஆனால் எதற்கு என்று தான் தெரியவில்லை, இன்னும் சூர்யா வெளியில் வரவில்லை எப்படியும் இன்னும் இரண்டு மாதத்தில் அவரும் ஒரு விலை ஏற்பாடு செய்து அவர் நடித்து வரும் கங்குவா படத்திற்கு புரமோஷன் செய்ய தொடங்குவார் என்பதை எதிர்பார்க்கலாம் என சினிமா வட்டாரங்களால் கூறப்படுகிறது. ஒருவேளை திமுகவை தவறிது படத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துட்டார்களோ என்ற கேள்வியும் வருகிறது. ஆனால், சூர்யா தற்போது நடந்த கலைஞர் 100 விழாவில் கலந்து கொண்டு கலைஞரை ஒற்று பபுகழாரம் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.